பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நீத்தல் விண்ணப்பம் * 139


வேர்க்கின்ற என்னை விடுதி கண்டாய்
      விரவார் வெருவ
ஆர்க்கின்ற தார் விடை உத்தரகோச
     மங்கைக்கு அரசே
ஈர்க்கின்ற அஞ்சொடு அச்சம்
    வினையேனை இருதலையே 8

வேர்க்கின்ற-மனம் புழுங்குகின்ற, விரவார்-பகைவர். தார் விடை-கிண்கிணிமாலை அணிந்த இடபம்.

‘ஐம்பொறிகளும் ஆசை காட்டித் தம் வழியே இழுக்க, அதில் செல்ல வேண்டுமென்று விரும்பினாலும் அதனால் என்ன விளையுமோ என்ற அச்சம் மறு பக்கம் இழுக்க, இப்படி இரு வகையிலும் இழுக்கப்பட்டு அலமருகின்ற என்னை ஏன் கூவி அழைக்கவில்லை. என் பிழைகளை எவ்வாறு பொறுத்து ஆட்கொள்ளப் போகிறாயோ என்று அஞ்சுகிறேன். எனினும், என்னைக் கைவிடவேண்டா’ என்கிறார்.

113.

இருதலைக் கொள்ளியின் உள் எறும்பு ஒத்து
     நினைப் பிரிந்த
விரிதலையேனை விடுதி கண்டாய்
    வியன் மூஉலகுக்கு
ஒரு தலைவா மன்னும் உத்தரகோச
     மங்கைக்கு அரசே
பொருது அலை மூஇலை வேல் வலன்
     ஏந்திப் பொலிபவனே 9

இருதலைக் கொள்ளி எறும்பு என்பதே முதுமொழி ஆகும். ஆனாலும் இதில் ஒரு குறை இருக்கிறது. ஒரு குச்சியின் இரண்டு பக்கங்களிலும் நெருப்புப் பற்றியிருப்பதால் (குச்சியின் மேலே உள்ள) எறும்பு இரண்டு பக்கங்களாலும் வெளியேற முடியாது. ஆனால்,