பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

140 * திருவாசகம் - சில சிந்தனைகள் - 2


இரு பக்கங்களிலும் நெருப்பு நெருங்கி வரவர வெப்பம் தாங்காத எறும்பு துடிப்பதால் கீழே விழுந்து தப்பித்துக் கொள்ள வாய்ப்பிருக்கிறது. பழமொழியில் உள்ள இக்குறையைப் போக்க, அடிகளார் ‘இருதலைக் கொள்ளியின் உள்ளெறும்பு ஒத்து’ என்கிறார்.

உள்ளீடு இல்லாமல் குழாய் போன்று இருக்கும் குச்சியில் இரண்டு பக்கமும் நெருப்புப் பற்றிக்கொண்டால் அந்நெருப்பு நெருங்கி வரவரக் குழாயின் உள்ளேயுள்ள எறும்பு சாவது தவிரத் தப்பிக்க வழியே இல்லை.

114.

பொலிகின்ற நின் தாள் புகுதப் பெற்று ஆக்கையைப்
        போக்கப் பெற்று
மெலிகின்ற என்னை விடுதி கண்டாய்
        அளி தேர் விளரி
ஒலி நின்ற பூம்பொழில் உத்தரகோச
        மங்கைக்கு அரசே
வலி நின்ற திண் சிலையால் எரித்தாய்
        புரம் மாறுபட்டே 10

அளி-வண்டு. விளரி-ஏழு இசையில் ஒன்று. வலிநின்றதிண் சிலை-வளைக்கப்படாத வலிய வில்.

இப்பாடலின் முதலடியில் மிக அற்புதமான ஒரு தத்துவத்தை அடிகளார். பேசுகின்றார். 'பொலிகின்ற நின் தாள் புகுதப்பெற்று’ என்பது திருப்பெருந்துறை நிகழ்ச்சியைக் குறிப்பதாகும். தாள் புகுதப் பெற்று என்பது சிந்திக்கவேண்டிய ஒன்றாகும். திருவடிகளில் தஞ்சமாகப் புகுந்து என்று பலரும் உரை கண்டுள்ளனர்.

புக்கு என்ற வினைக்கு ஒரு வினை முதல் வேண்டும். திருவடிகளில் ஒருவர் தலைவைத்து வணங்கலாமே தவிர, பருப்பொருளாகிய உடம்புடன் திருவடிகளில் புகுதல் என்பது இயலாத காரியம். ஒலிதரு நின்தாள் வணங்கப்-