பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நீத்தல் விண்ணப்பம். 143


அப்படியிருக்க ஆக்கையைப் போக்கப்பெற்று என்று பாடியதன் நோக்கம் என்ன? அதனைப் போக்க இயலாமையின் மெலிகின்றேன் என்று பாடியதன் நோக்கம் என்ன ?

இந்த வினாக்களுக்கு விடை இப்பாடலின் முதலடியில் தரப்பெறுகிறது.

'அஞ்சு என்று சொல்லப்பெறும் ஐம்பொறிகளும் எனக்கு உதவுவதுபோலக் காட்டி, உன் திருவடியிலிருந்து பிரியாமல் இருக்க வேண்டும் என்ற என் குறிக்கோளுக்கு மாறுபட்டு, வஞ்சனை செய்துவிட்டன. திருவடியில் வீழ்ந்து வணங்கிய அந்த நேரத்தில் இந்த ஐந்தும் அடங்கி ஒடுங்கி எனக்கு உதவிபுரிந்தன. ஆனால், இப்பொழுது மாறுபட்டு என்னை வஞ்சித்துவிட்டன.'

'ஐயா! இந்த ஐந்தின் துணை கொண்டுதான் உன் திருவடிகளில் வணங்கினேன். இவ்வுடம்பிலிருந்து என் ஆன்மா உன் திருவடிகளில் புகும்போது, தேகப் பிரக்ஞை இல்லாதிருந்தபோது இந்த ஐந்தும் வலியிழந்து செத்துக் கிடந்தன.'

‘ஆனால் இப்பொழுது அவை வலுப்பெற்று என்னை அடக்கி ஆளத் தொடங்கிவிட்டன. உன் மணிமலர்த்தாளோடு இணைந்து சென்றிருக்க வேண்டிய என்னை அதனை விட்டுப் பிரியுமாறு செய்துவிட்டன.'

'ஐயா! திருவடிக் காட்சி தந்தும், தீட்சை கொடுத்தும், ஏற்றுக்கொண்டும் உதவியிருக்க, நின்னோடு இணையாமல் இந்த ஆக்கையில் மறுபடியும் புகுந்து திரிகின்றேன் என்றால், தயைகூர்ந்து என்னைக் குறை கூறாதே. நீ கொடுத்த அஞ்சும் எனக்கு உதவுவதற்குப் பதிலாக நின் மலர்த்தாளில் இருந்து மாறுபட்டுச்