பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நீத்தல் விண்ணப்பம் * 161


விழும் அடியேனை விடுதி கண்டாய்
மெய்ம் முழுதும் கம்பித்து
அழும் அடியாரிடை ஆர்த்து வைத்து
ஆட்கொண்டருளி என்னைக்
கழுமணியே இன்னும் காட்டு கண்டாய்
நின் புலன் கழலே
27


கொழுமணி-முத்து.. குன்றி-குறைந்து.. கம்பித்து-நடுங்கி. ஆர்த்து வைத்து-கட்டி வைத்து.. புலன் கழல்-ஞானமாகிய திருவடி. கழுமணி-கழுவப் பெற்ற மணி.

‘மகளிர் மோகத்தில் சிக்குண்டு மீள வழி தெரியாது இருக்கின்ற என்னை விட்டுவிடாதே'.

'பேரன்பு காரணமாக உடல் முழுவதும் நடுங்குகின்ற அடியார் கூட்டத்திடையே திருப்பெருந்துறையில் என்னை இருத்தித் திருவடி தரிசனம் தந்தாய். அத்தரிசனத்தை மீண்டும் பெற விழைகின்றேன்’ என்றவாறு.


132. புலன்கள் திகைப்பிக்க யானும் திகைத்து
இங்கு ஒர் பொய்ந் நெறிக்கே
விலங்குகின்றேனை விடுதி கண்டாய்
விண்ணும் மண்ணும் எல்லாம்
கலங்க முந்நீர் நஞ்சு அமுது செய்தாய்
கருணாகரனே
துலங்குகின்றேன் அடியேன் உடையாய்
என் தொழுகுலமே 28

திகைப்பிக்க-மயக்க. தொழுகுலம்-தொழத்தக்க இனம். முந்நீர்-கடல். துலங்குகின்றேன்-நடுங்குகின்றேன்.

‘திருப்பெருந்துறை அனுபவத்தில் இப்புலன்கள் அடங்கி ஒடுங்கிச் செயலிழந்து நின்றமையின் யான் அப்பொழுது உன் அருளார் அமுதத்தை வாரிக்கொண்டு விழுங்கினேன்'.