பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

168 * திருவாசகம் - சில சிந்தனைகள் - 2


விதுவிதுத்தல்-விரைந்து ஆசைப்படுதல்.

‘கயிலையில் உள்ள பரம்பரனே! தவறு செய்கிறோம், நின் குறிப்பின்வழி வாழவில்லை என்ற குறுகுறுப்பு நெஞ்சில் இல்லாமல், என் விருப்பம்போல் செயல்களைச் செய்துவிட்டு, உன் ஆணையின்படியே வாழ்கின்றேன் என்று நெஞ்சைச் சமாதானம் செய்துகொண்டு உன்னை அடைவதற்கு விழைகின்றேன்! இத்தகைய போலியான என்னை விட்டுவிடாதே".

‘அன்று திருப்பெருந்துறையில் மிக எளிமையாக வந்து காட்சியளித்து, தேன்போன்ற இனிமையைப் புகட்டினாய். அதன் பயனாகக் கல்லாய் இருந்த என் மனம் கனியாய்க் கனிந்தது'.

'இன்றோ நீ வரவுமில்லை; அனுபவமாகிய தேனைத் தரவும் இல்லை. அதனால் என் மனம் மறுபடியும் கல்லாயிற்று. இதனைப் போக்க ஒரே வழிதான் உண்டு. நீ மதுமதுப்போன்று அதாவது நீரில் இனிய சுவையுடைய தேள் கலந்தது போன்று. என் எதிரே வந்து, என் மனத்தை வாழைப்பழம் போலக் கணிவித்தல் வேண்டும்’ என்கிறார்.

‘நீரும் தேனும்போல வரவேண்டும் என்பது நுண்மையான கருத்தை உட்கொண்டதாகும். நீர் எங்கும் எப்பொழுதும் முயற்சியின்றிக் கிடைப்பதாகலின் நீர்போன்று என்றார். அதாவது நான் எங்கு, எப்பொழுது, எந்நிலையில் உன் அருளை வேண்டினாலும் அங்கு, அப்பொழுது, அந்நிலையில் நின் அருள் நீர்போன்று கிடைக்கவேண்டும். இதன் மறுதலையாகத் தேன் குறிப்பிட்ட இடத்தில்தான் கிடைக்கும். அது எங்கோ மரத்தின்மேல் ஒரு கிளையில் இருக்கும். யாரோ ஒருவர் பெரு முயற்சியை மேற்கொண்டு இத்தேனை எடுத்து உண்பவருக்கு வழங்கவேண்டும். அதேபோன்று கயிலைப்