பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

170 * திருவாசகம் - சில சிந்தனைகள் - 2


139.

பரம்பரனே நின் பழ அடியாரொடும்
         என படிறு
விரும்பு அரனே விட்டிடுதி கண்டாய்
        மென் முயல் கறையின்
அரும்பு அர நேர் வைத்து அணிந்தாய்
        பிறவி ஜவாய் அரவம்
பொரும் பெருமான் வினையேன் மனம்
        அஞ்சிப் பொதும்பு உறவே 35

பரம்பரன்-மேலானவற்றிற்கெல்லாம் மேலானவன் முயற்கறையின் அரும்பு-முயலாகிய களங்கத்தினையுடைய பிறைமதி. அர-பாம்பு. நேர் வைத்து அணிந்தாய் என்றது பகை நீங்கத் தரித்தாய் என்பது குறித்து. ஐவாயரவம்- ஐந்தலைப்பாம்பு. பொதும்பு-மரச்செறிபு.

திருப்பெருந்துறை நிகழ்ச்சியில் மீட்டும் அடிகளாரின் மனம் தோய்கின்றது. தில்லைக் கூத்தனே குருவடிவுடன் அமர்ந்திருக்கும் அந்தச் சூழலில், எதிரே இருந்தவர்கள் அக்கூத்தனின் பழைய அடியார்கள் அல்லரோ அக்கூத்தன் மானுட வடிவுடன் வந்ததுபோல இந்தப் பழைய அடியார்களும் அந்த நாடகத்திற்கு ஏற்ப மானுட வடிவுதாங்கி அடியார்களாக வந்திருந்தார்கள்.

தம்மை வந்து வணங்கிய அடிகளாரைக் குருவானவர் அந்த அடியார்களிடையே அமர்வித்தார் அல்லவா? அதை நினைந்து இங்கே பேசுகிறார் அடிகளார்.

எதிரே இருந்த அடியார்கள் தூய்மையே வடிவானவர்கள்; இறைவன் திருவடியை விட்டு நீங்காதவர்கள். அவர்களிடையே, பூத உடலுடன் அமைச்சராக இருந்து எத்தனையோ காரியங்களைச் செய்த ஒருவர் அமர்த்தப்படுகிறார். அந்த விநாடியில் இவர் அமைச்சர் வேடத்தில் இருந்தாரே தவிர அடியார் வேடம் கூட இல்லையே! அவற்றையெல்லாம் நினைந்து 'பழ