பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நீத்தல் விண்ணப்பம் * 177


இப்படி இருந்துங்கூட, இதனை அடிகளார் அறிந்திருந்துங்கூட, சில நேரங்களில், சில விநாடிகள் இவை அனைத்தும் மறக்கப்பட்டுவிட்டன. உள்ளத்தில் ஏற்பட்ட நிறைவுகூடத் தம் கல்வியாலும் முயற்சியாலும் வந்தது என்ற நினைவு அடிகளார் உள்ளத்தில் தோன்றியிருக்க வேண்டும்.

இத்தனை விபரங்களையும் குறிக்கவே 'தனித்துணை நீ நிற்க (என்னுள் நிலையாக நீ நிற்கவும், அதனை மறந்து) யான் தருக்கித் தலையால் நடந்தேன்’ என்று பேசுகிறார்.

'துணையாக நீ நிற்கின்றவரையில் வினைகள் என்னை நெருங்க அஞ்சி ஒளிந்துகொண்டன. இப்பொழுது உன் துணையை மறந்தவுடன் ஒளிந்துகொண்டிருந்த வினைகள் என்னை நெருங்கி எனக்குத் துணையாக அமைந்த விட்டன என்பதை அறிவிக்கவே வினைத்துணையேன்' என்றார்.

வினைகளால் சூழப்பெற்று, இனி என்னே உய்யுமாறு என்று எண்ணி நொந்த நிலையில், தாம் தனியன் என்பதை உணர்ந்த அடிகளார். இந்த இக்கட்டிலிருந்து விடுபடக் குருவின் திருவடிகளைப் பற்றுக்கோடாகக் கொண்டார். அத்திருவடிகள் இவர் தனிமையைப் போக்கும் துணையாகவும், வினைகளை வெல்ல உதவும் தனித் துணையாகவும் நின்றன.

ஆனாலும் என்ன கொடுமை! மனித மனத்தின் அடித்தளத்தில் நிற்கும் ஆணவம், தமியன் என்று நினைத்து அஞ்சியபொழுது செயலிழந்து அடங்கிக் கிடந்தது. தனிமை போக்கத் துணை வந்தவுடன் தனிமை என்ற அச்சம் போய்விட்டது. அச்சம் போனபின் அந்த ஆணவம் லேசாகத் தலைதூக்கிற்று. அச்சம் போனதால், தான் மெள்ளத் தலைதூக்க முடிந்தது என்பதை இந்த ஆணவம் மறக்கலாயிற்று. அம்மட்டோடு இல்லை. அச்சம் போகத்