பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10 * திருவாசகம் - சில சிந்தனைகள் - 2



தேவர் முதலியோர், தக்கன் வேள்வியில் அவிசை உண்டனர். ஆலகால நஞ்சு கண்டவிடத்து 'காப்பாற்று' என்று முறையிட்டனர். இதனை அறிந்திருந்தும், இவ்வுலகிடை வாழும் பூசுரராகிய வேதியர், சிவ பெருமானின் தனித்துவம் தெரியாமல், அவன் மூவருள் ஒருவன் என்று சொல்லிக்கொண்டு இறுமாந்து திரி கின்றனர். ஐயோ பாவம்!


9.

தவமே புரிந்திலன் தண் மலர்
இட்டு முட்டாது இறைஞ்சேன்
அவமே பிறந்த அரு வினையேன்
உனக்கு அன்பர் உள் ஆம்
சிவமே பெறும் திரு எய்திற்றிலேன்
நின் திருவடிக்கு ஆம்
பவமே அருளு கண்டாய்
அடியேற்கு எம் பரம்பரனே 5

முட்டாது-குறைவற. அவம்-வீண். ஆம்-அடியார்களிடை உளதாகிய, பவம்-பிறப்பு.

இப்பாடலுக்கு மரபுபற்றிப் பொருள் எழுதியவர்கள் உண்டு. தனித்தனியாக ஒவ்வோர் அடியாக எடுத்து, சரியை, கிரியை என்று பொருள் செய்வதைக் காட்டிலும், பாடல் முழுவதையும் மனத்துள் வாங்கிக்கொண்டு சிந்தித்தால் பின்வருமாறு பொருள்கூறலாம் என்று தோன்றுகிறது.

'தவம் செய்யவில்லை; மலரிட்டு வணங்கவில்லை; உன் அடியார் கூட்டத்தோடு உடனிருக்கும் பேற்றைப் பெறவில்லை; பயனற்ற பிறவியை எடுத்துள்ளேன் என்றாலும், உன் திருவடிக்கண் சேரும் தகுதியை அளித்து அருளுவாயாக எம் தலைவனே!' என்ற பொருள்பட வரும் இப்பாடல், குருநாதரிடம் இறையனுபவம் பெற்று, பின்னர் அது நீங்கியவழி அடிகளாருக்கு உண்டான பெரு