பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

182 * திருவாசகம் - சில சிந்தனைகள் - 2



‘என் உயிருக்குக் கதியாகவுள்ள உன் திருவடிகளைத் திருப்பெருந்துறையில் நீ எனக்கு அருள் செய்தபொழுதே, இந்த ஊன் உடம்பை நான் அழித்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யவில்லை எனினும் இப்பொழுது என்னை விட்டுவிடாதே’ என்றவாறு.

147.

மன்னவனே ஒன்றும் ஆறு அறியாச்
      சிறியேன் மகிழ்ச்சி
மின்னவனே விட்டிடுதி கண்டாய்
      மிக்க வேத மெய்ந் நூல்
சொன்னவனே சொல் கழிந்தவனே
      கழியாத் தொழும்பர்
முன்னவனே பின்னும் ஆனவனே
       இம் முழுதையுமே 43

ஒன்றுமாறுறியா-பொருந்துதலை அறியாத ஒன்றும் மாறு அறியா-ஒன்றும் மாறுபடுதலை அறியாத எனினுமாம். சொல்சொல்லின் எல்லையை கழியாத் தொழும்பர்-விட்டு நீங்காத அடியார்கள்.

'மன்னவனே! திருப்பெருந்துறையில் உன்னைக் கண்டும், அடியார்கள் உன் திருவடியோடு ஒன்றியிருத்தலைக் கண்டும்கூட உன் திருவடிகளில் ஒன்றிவிடும் வழியை அறியாமல், இவ்வுலகிலேயே இந்தப் பூத உடலுடன் தங்கிவிட்ட எனக்கும், ஒரு சிலநேரம் மின்னல்போல் தோன்றி மகிழ்ச்சியைத் தந்தவனே, என்னை விட்டுவிடாதே'.

வேதத்தைச் சொற்களால் அருளியவனே! எனினும், அச்சொற்களுக்கும் அவை குறிக்கும் பொருள்களுக்கும் அப்பாற்பட்டு நிற்பவனே! உன் திருவடியை விட்டுப் பிரியா அடியார்களுக்கு முன் நின்று அவர்களை வழிநடத்துபவனே! அஞ்ஞான இருள் சூழ்ந்த மந்த