பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

208 * திருவாசகம் - சில சிந்தனைகள் - 2


வாய்விட்டுச் சிரித்துக்கொண்டே இருப்பவர்கள் உள்ளத்தில் கள்ளமில்லாதவர்கள் என்று மனவியலார் கூறுவர். ஏனையோர் விளித்துக்கொண்டு வெளியே நிற்கும்போதும், உள்ளே இருப்பவள் அரை உறக்கத்தில் இருந்தாலும் அவள் சோம்பேறி அல்லள், இறையன்பில் குறையாதவள், தூய்மையான உள்ளம் படைத்தவள், எப்பொழுதும் சிரித்துக்கொண்டே இருப்பவள், உள்ளத்தில் கள்ளமில்லாதவள் என்பவற்றையெல்லாம் உள்ளடக்கி ‘நகையாய்’ என்றே விளித்தனர்.

159.

மால் அறியா நான்முகனும் காணா மலையினை நாம்
போல் அறிவோம் என்று உள்ள பொக்கங்களே பேசும்
பால் ஊறு தேன் வாய்ப் படிறீ கடை திறவாய்
ஞாலமே விண்ணே பிறவே அறிவு அரியான்
கோலமும் நம்மை ஆட்கொண்டருளிக் கோதாட்டும்
சீலமும் பாடிச் சிவனே சிவனே என்று
ஓலம் இடினும் உணராய் உணராய் காண்
ஏலக்குழலி பரிசு ஏல் ஓர் எம்பாவாய் 5

நாம் அறிவோம் போல் என்று-நாம் அறிந்துவிடுவோம் போல என்று. பொக்கம்-பொய். படிறீ-வஞ்சகீ. ஏலம்-மயிர்ச்சாந்து. கோதாட்டும்-குற்றங்களிலிருந்து நீக்கும்.

முதல் நான்கு பாடல்களில் உள்ளே உறங்குபவளின் உள்ளத் தூய்மையை நினைந்து நன்முறையில் விளித்தவர்கள், இவ்வளவு கூறியும் அவள் எழுந்து வராமையால் ஓரளவு சினந்து பேசத் தொடங்குகின்றனர். ‘பால் ஊறு தேன் வாய்ப் படிறீ' என்பது முரண்பட்ட சொற்கனையுடைய தொடராகும். பாலுறு தேன்வாய் என்றதால் உள்ளே இருப்பவள் விழித்திருக்கும் நிலையில் பேசும் பேச்சு, பாலும் தேனும் கலந்ததுபோல இனிமையுடையதாக இருந்தது என்பது பெறப்பட்டது. ஆனால், இப்பொழுது அவள் செயல், அந்த இனிய