பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

210 * திருவாசகம் - சில சிந்தனைகள் - 2


ஓலமிடும் சத்தங் கேட்டதால் காதின்வழி புகும் அந்த ஓசை, ஓய்வெடுத்துக்கொள்ளும் மனத்தைத் தட்டி எழுப்புகிறது. விழித்து எழும் மனம் அது என்ன ஓலம் என்று அறிய அறிவின் உதவியை நாடுகின்றது. அறிவு தொழிற்படவே ஓலத்தின் சொல்லையும் பொருளையும் ஆய்கின்றது. இறைவன் புகழைப் பாடும் ஓலம் என்பதை அறிந்துகொண்ட அறிவு, அச்சொல்லையும் பொருளையும் கிரகித்து, அவற்றை மெல்ல உணர்வினிடம் செலுத்து கின்றது. இறையருளை அனுபவிக்க மனத்திற்கோ அறிவிற்கோ, தகுதியோ வாய்ப்போ இல்லை. ஓலத்தில் தோன்றும் சொற்களும் அவற்றின் பொருளும் உணர்விற்கு விருந்தாக அமைந்திருத்தலின், இச்சொற்களைக் கேட்ட வுடன் உணர்வு இறையனுபவத்தில் மூழ்கியிருத்தல் வேண்டும். அவ்வாறு அவள் மூழ்கவில்லை; ஆதலால், ‘ஓலமிடினும் உணராய் உணராய் காண்’ என்று கூறினர்.

160.

மானே நீ நென்னலை நாளை வந்து உங்களை
நானே எழுப்புவன் என்றலும் நாணோமே
போன திசை பகராய் இன்னம் புலர்ந்தின்றோ
வானே நிலனே பிறவே அறிவு அரியான்
தானே வந்து எம்மைத் தலையளித்து ஆட்கொண்டருளும்
வான் வார் கழல் பாடி வந்தோர்க்கு உன் வாய் திறவாய்
ஊனே உருகாய் உனக்கே உறும் எமக்கும்
ஏனோர்க்கும் தம் கோனைப் பாடு ஏல் ஓர் எம்பாவாய் 6

நென்னல்-நேற்று. தலையளித்து-கருணைசெய்து. வான் வார் கழல்-ஆகாயத்து விளங்கும் அழகிய திருவடி.


மேலைப் பாடல்கள்போல் அல்லாமல் இப்பாடல் முழுதும் புறத்தே நின்றவர்கள் கூற்றாகவே முடிகின்றது. சராசரி மனிதர்களின் உரையாடலில் யாரோ ஒருவர் திடீரென்று முனைத்தெழுந்து 'போனது போகட்டும்