பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

212 * திருவாசகம் - சில சிந்தனைகள் - 2


161.

அன்னே இவையும் சிலவோ பல அமரர்
உன்னற்கு அரியான் ஒருவன் இரும் சீரான்
சின்னங்கள் கேட்பச் சிவன் என்றே வாய் திறப்பாய்
தென்னா என்ன முன்னம் தீ சேர் மெழுகு ஒப்பாய்
என்னானை என் அரையன் இன் அமுது என்று எல்லோமும்
சொன்னோம் கேள் வெவ்வேறாய் இன்னம் துயிலுதியோ
வன் நெஞ்சப் பேதையர்போல் வாளா கிடத்தியால்
என்னே துயிலின் பரிசு ஏல் ஓர் எம்பாவாய் 7

சின்னங்கள்-சங்கு தாரை முதலிய விடியற்கால இசைக் கருவிகள். ஆனை-எனக்கு ஆனை போன்றவன்.

இப்பாடல் முழுவதும், எழுப்ப வந்தவர்கள் கூற்றாகவே அமைந்துள்ளது. 'தாயே! அமரர் பலரும் நினைக்கவும் முடியாதவன், ஒப்பற்றவன், மாபெருஞ் சிறப்பை உடையவனாகிய அத்தகையவனை நினைந்து, விடியற்காலை நேரத்தில் திருச்சின்னங்கள் ஒலிக்கத் தொடங்கியவுடன், அந்த விநாடியே சிவசிவ என்று கூறுவாயே! தென்னாட்டுக்கு உரியவனே என்று யாரேனும் கூறினால், அவர்கள் கூறி முடிப்பதற்குள் தீயிற்பட்ட மெழுகுபோல் மனம் உருகுவாயே! நேற்றுவரை இவ்வாறிருந்த உனக்கு இன்று என்ன நிகழ்ந்துவிட்டது? இதோ நாங்கள் அனைவரும் உன் வீட்டு வாயிலில் நின்று எங்கள் அன்பிற்குரியவனே! எங்கள் தலைவனே! என்று ஒன்றுசேர்ந்தும் தனித்தனியாகவும் அவன் புகழைப் பாடுகின்றோமே! இத்தனையிலும் உறக்கத்திலிருந்து விழிக்காமல் அதிலேயே ஆழ்ந்துள்ளாயே! துயிலின் பெருமை இத்தகையது என்று அறிந்துகொண்டோம்’ என்கின்றனர்.

திருச்சின்னங்களைத் தெருவூடே வாசித்துக்கொண்டு செல்வார்கள். தனிப்பட்ட முறையில் யார் வீட்டின் எதிரேயும் நின்று ஊதமாட்டார்கள். அப்படி இருந்தும்