பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவெம்பாவை * 213


தூரத்தே கேட்கும் அவ்வொலி காதில் பட்டவுடன் எழுந்து சிவசிவ என்று கூறுவாய் என்கின்றார்கள்.

‘தென்னா’ என்ற சொல் தென்னாட்டவன் என்ற பொதுப் பொருளையும், தென்னாடுடைய சிவன் என்ற சிறப்புப் பொருளையும் தந்துநிற்கும் சொல்லாகும். இதில் தென்னா என்று கூறுபவர்கள் எந்தப் பொருளில் கூறினார்கள் என்று சொல்வதற்கில்லை. அப்படி இருந்தும் அந்தச் சொல்லைக் கூறி முடிப்பதற்குள் உருகுவாய் என்கின்றனர்.

தூரத்தே சின்னங்கள் கேட்கும்போது உருகுவதும் தென்னா என்ற பொதுச் சொல்லைக் கேட்டவுடன் உருகுவதும் இறையன்பில் மிக முதிர்ந்த நிலையில் உள்ளவர்களின் செயலாகும். இவ்விரண்டு பண்புகளையும் உள்ளே உறங்குபவளுக்கு ஏற்றிக் கூறுவதால், இப்பொழுது உறங்கிக்கொண்டிருந்தாலும் அப்பெண்ணரசி இறையன்பில் மிக உயர்ந்த நிலையில் உள்ளவள் என்பதைக் கூறிவிட்டனர்.

திருக்குறிப்புத் தொண்டர் புராணத்தில் சேக்கிழார் பெருமான் இக்கருத்தை அற்புதமாக எடுத்து ஆளுகிறார். 'தேர் ஒலிக்க மா ஒலிக்க' என்று தொடங்கும் திருக் குறிப்புத் தொண்டர் புராணப் பாடலில் அடியார்களின் இலக்கணத்தைக் கூறவந்த காப்பிய ஆசிரியர்,

நீர் ஒலிக்க அரா இரைக்க நிலா முகிழ்க்கும் திருமுடியார் பேர் ஒலிக்க உருகும் அவர்....

(பெ. பு. திருக்குறிப்பு தொயு-113)

என்று பாடுகிறார். இறைவன் பேர் ஒலித்த உடனேயே உருகுகின்றவர்கள் சிறந்த அடியார்கள் என்று இங்குப் பேசப்பெறுகிறது. ஒலிக்க என்று கூறியதால், இதனைச் சொல்பவர்கள் இறைச்சிந்தனையோடு இறைவன் பெயர்களைக் கூறினார்கள் என்று சொல்வதற்கில்லை. ஒலித்தல்