பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவெம்பாவை • 223


நிறைவையும் பண்பாட்டையும் விளக்குகின்றது. அடியார்களுக்குக் குறையென்பதே இல்லை என்பதைக் 'கேடும் ஆக்கமும் கெட்ட திருவினார்' (பெ.புரா திருகூட்டச் சிறப்பு-8) என்ற தொண்டர்சீர் பரவுவாரின் அடி விளக்கமாகச் சொல்கிறது.

164.

பாதாளம் ஏழினும் கீழ் சொல்கழிவு பாத மலர்
போது ஆர் புனை முடியும் எல்லாப் பொருள் முடிவே
பேதை ஒருபால் திருமேனி ஒன்று அல்லன்
வேத முதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும்
ஓத உலவா ஒரு தோழன்(ம்) தொண்டர் உளன்
கோது இல் குலத்து அரன்தன் கோயில் பிணாப் பிள்ளைகாள்
ஏது அவன் ஊர் ஏது அவன்பேர் ஆர் உற்றார் ஆர் அயலார்
ஏது அவனைப் பாடும் பரிசு ஏல் ஓர் எம்பாவாய் 10

சொற்கழிவு-சொல்லெல்லையைக் கடந்த இடம். வேதமுதல் பிரணவம். பிணாப்பிள்ளை-பெண்பிள்ளைகள். ஓத உலா சொல்லில் அடங்காத. பாடிக்கொண்டு நீராடச் செல்கின்ற பெண்கள் குளத்திற்குச் சென்றபோது, தங்களுக்கு முன்னரே ஒரு மங்கையர் கூட்டம் அங்கிருப்பதைக் கண்டனர். இவர்களைப்போலத் தனித்தனி வீடுகளிலிருந்து வந்தவர்கள் அல்லர், பிணாப் பிள்ளைகள் என்று அழைக்கப்படும் அப்பெண்கள்.

கன்னிமாடங்களில் இருந்துகொண்டு திருக்கோயில் பணியையே தம் முழுநேரப் பணியாகக் கொண்டவர்கள் அப்பிணாப் பிள்ளைகள். கன்னிப் பருவத்திலேயே திருக்கோயில் பணிக்கென்று தம்மை அர்ப்பணித்துக் கொண்ட இவர்கள், தம் போன்றவர்கள் தங்குமிடமாகிய கன்னிமாடத்தில் முழுமையாகத் தங்கிவிட்டனர்.