பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16 * திருவாசகம் - சில சிந்தனைகள் - 2



நாடகத்தால் என்று தொடங்கும் இப்பாடல் எளிதாகப் பொருள் விளங்கிக்கொள்ளும் நிலையில் அமையவில்லை. திருப்பெருந்துறை நிகழ்ச்சியை மனத்தில் வைத்துக்கொண்டு, இப்பாடலை நோக்கியபொழுது தோன்றிய சில கருத்துக்களைத் தந்துள்ளேன்.

அமைச்சர் கோலத்தில் இருந்தவர் திருவடி தீட்சை பெற்று, முற்றிலும் புதிய மனிதராகி இறையனுபவத்தில் திளைக்கின்ற நேரத்தில், எதிரே, குரு இருக்கின்றார்; இவரைச் சுற்றி அடியார் திருக்கூட்டம் இருக்கின்றது. அந்த அடியார்கூட்டத்தின் இடையே தம்மை இருக்குமாறு பணித்தவர் குருநாதர் என்பதை நன்றாக அடிகளாரால் உணர முடிகிறது. குருநாதரைச் சிவன் என்று தேறிவிட்ட காரணத்தாலும் அவருடைய திருவடி சம்பந்தம் பெற்றதாலும் அடியார் கூட்டத்தினிடையே இருக்கும் வாய்ப்புக் கிடைத்ததாலும் வீடுபேறு தமக்கு உறுதி என்ற நினைவில் இறையனுபவத்தில் ஆழ்ந்துள்ளார் அடிகளார்.

சில விநாடிகள் கழித்துக் கண்களைத் திறந்து பார்க்கையில் குருவும் இல்லை; அடியார்கூட்டமும் இல்லை. திடுக்குற்ற அடிகளாருக்கு, அந்த விநாடி மனத்தில் தோன்றிய எண்ணமே இப்பாடலாக வெளிப்படுகிறது. தம் முடைய அன்பு பொய்; தாமும் பொய் என்ற எண்ணம் வலுவடைகின்றது. பொய்யன்புடன் மெய்யடியார் கூட்டத் துள் நுழைந்து வீடுபேறு கிட்டிவிட்டதாகவே எண்ணி மகிழ்ந்திருந்த நிலையை 'மிகப் பெரிதும் விரைகின்றேன்' என்ற சொற்களால் குறிப்பிடுகின்றார். தாம் பொய்யன் என்ற எண்ணம் அடிகளாரை வலுவாகப் பற்றியிருந்தது என்பது, திருவாசகத்தில் இருபது இடங்களுக்கும் மேலாகத் தம்மைப் பொய்யனென்று அடிகளாரே, கூறிக்கொள்வதால் தெளிவாகிறது.

திருப்பெருந்துறையில் குருநாதர் திருவடிகளில் வீழ்கின்ற வரையில் அவர் அமைச்சர் உடையுடன் இருந்த