பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

240 * திருவாசகம் - சில சிந்தனைகள் - 2


நீருள் மூழ்கிய கூந்தல் வெளியே வரும் என்ற நம்பிக்கையில் எழுந்த வண்டுகள் வேறிடம் செல்லாமல் அங்கேயே சுற்றுகின்றன. அதேபோல நாம் அனுபவிக்கும் இன்பம் நம்மை விட்டுப் போய்விட்டாலும் இன்றில்லா விடினும் நாளை அது நமக்கு மீண்டும் கிடைக்கும் என்ற இச்சையால் நாமும் அதைச் சுற்றிச் சுற்றி வருகின்றோம்.

கூந்தலிலும் மலரிலும் நாட்டம் கொண்ட வண்டு, அடுத்துள்ள சீதப் புனலில் குளிக்கவேண்டுமே என்ற எண்ணமே இல்லாமல், கூந்தலை எதிர்பார்த்து நிற்பதுபோல, இறைவன் திருவருள் சீதப்புனல்போல் நம்மைச் சுற்றியிருக்கவும் அதில் மூழ்கமாட்டாமல் நிலையற்ற இன்பத்தை என்று வரும் என்று காத்து நிற்கின்றோம். இத்தனை பொருளும் அடங்குமாறு அடிகளார். இப்பாடலை அமைத்துள்ளார்.

‘சிற்றம்பலம் பாடி’ என்பது தொடக்கம் 'பாதத் திறம்பாடி' என்பது வரை உயிர்கள் பாட வேண்டியவற்றைப் பட்டியலிட்டுக் காட்டுகிறார் அடிகளார்.

இறைவழிபாடு என்பது உருவ வழிபாட்டில் தொடங்கி மேலேமேலே சென்று எல்லாப் பொருளிலும் அருவமாய் நிற்கும் பரம்பொருளைச் சிந்திப்பதே ஆகும். ஆனால், அடிகளார். இம்முறையைத் தலைகீழாக மாற்றுகின்றார்.

சிற்றம்பலம் என்பது வெளியைக் குறிப்பது ஆகும். ஆக, சொல் பொருள் கடந்து நிற்கும் அப் பரவெளியைப் பாடுக என்கிறார். இப்பரவெளிக்குக் கீழே இறங்கினால் அடுத்து நிற்பது ‘சப்தப் பிரபஞ்சம்' ஆகும். அபெளர்ஷேயம் எனப்படும் வேதம், ஒலிக் களஞ்சியம் ஆதலால் அதனை முன்னர்க் கூறி, அதனை அடுத்து நிற்பது அர்த்தப் பிரபஞ்சம் ஆதலால் அதனைக் குறிக்கப் பொருள்’ என்ற சொல்லைப் பயன்படுத்துகின்றார். வேதப்பொருள் பாடி என்ற தொடர் வேதமாகவும், அது குறிக்கும் பொருளா-