பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தரு அம்மானை * 275


மனத்திற்கு அமைதி, ஆனந்தம் என்பவற்றைத் திருவடி தருகின்றது. அதேபோல அந்த இரண்டையும் இனிய தேனும் தெளிந்த அமுதும் தருகின்றன. எனவே, மனத்திற்கு அமைதி, ஆனந்தம் தந்த காரணத்தால் திருவடிக்கு அமுதும், தேனும் உவமையாகிவிட்டன.

179. கல்லா மனத்துக் கடைப்பட்ட நாயேனை
வல்லாளன் தென்னன் பெருந்துறையான் பிச்சு ஏற்றிக்
கல்லைப் பிசைந்து கனி ஆக்கித் தன் கருணை
வெள்ளத்து அழுத்தி வினை கடிந்த வேதியனைத்
தில்லை நகர் புக்குச் சிற்றம்பலம் மன்னும்
ஒல்லை விடையானைப் பாடுதும் காண் அம்மானாய் 5

கல்லைப்பிசைந்து கனியாக்கல்-சுவையற்ற வலிய கல்போலும் மனத்தைச் சுவையுள்ள மென்மையான பழமாகச்செய்தல். கடிந்த-நீக்கிய. ஒல்லை விடையான்-விரைந்து செல்லும் இடபத்தை உடையவன்.

மேலைப் பாடல்களைப்போல இப்பாடலும் திருப்பெருந்துறை அனுபவத்தை நினைந்து பாடியதாகும். இப்பாடலின் தனிவிசேடம் என்னவென்றால், குருநாதர் ஆட்கொள்வதற்கு முன்னர்த் தம் மனநிலை இருந்த தன்மையையும், ஆட்பட்ட பின்னர் அம்மனநிலையில் ஏற்பட்ட மாறுபாட்டையும் சிந்திப்பதாகும்.

‘கல்ஆம் மனத்துக் கடைப்பட்ட நாயேன்' என்றதால் ஆட்படுவதன் முன்னர்த் திருவாதவூரரின் மனம் கல்போன்று இருந்தது என்பதாம். தலைமையமைச்சராக இருந்த ஒருவருக்கு அறிவின் பயனாக உள்ள கல்வி, உலக அனுபவம் ஆகிய அனைத்தும் நிரம்பியிருந்தன. ஆனால், இந்தக் கல்விச் செல்வமும், அனுபவத் தொகுப்பும் இவருடைய மனத்தை கனிவிக்க முடியவில்லை; அன்பு