பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

294 * திருவாசகம் - சில சிந்தனைகள் - 2


183.

துண்டப் பிறையான் மறையான் பெருந்துறையான்
கொண்ட புரிநூலான் கோல மா ஊர்தியான்
கண்டம் கரியான் செம் மேனியான் வெள் நீற்றான்
அண்டம் முதல் ஆயினான் அந்தம் இலா ஆனந்தம்
பண்டைப் பரிசே பழ அடியார்க்கு ஈந்தருளும்
அண்டம் வியப்பு உறுமா பாடுதும் காண் அம்மானாய் 9

கோலமா-அழகிய குதிரை. ஈந்தருளும்-கொடுத்தருளும் வகையை.

'துண்டப் பிறையான்' தொடங்கி 'அண்டம் முதல் ஆயினான்’வரை இறைவனுடைய சிறப்புக்கள் பல் வகையானும் போற்றப்பெறுகின்றன.

பழ அடியார்க்கு அந்தமிலா ஆனந்தத்தை, பண்டைப் பரிசே தருகின்றான் என்பது இந்நாட்டவர் கண்ட பழைய மரபாகும்.

பழ அடியார் என்பது பரம்பரை பரம்பரையாக இறைத்தொண்டில் ஈடுபட்டவர்களைக் குறிப்பதாகும். பழ அடியார் என்றும் புத்தடியார் (திருவாச: 157) என்றும் அடிகளாரே குறிப்பிடுகின்றார்.

ஏயர்கோன் கலிக்காமரும் அடியார்க்கு இறைவனிடம் உள்ள உரிமையை ‘எந்தை தந்தை’ (பெபு:ஏயர்-392) என்று தொடங்கும் பாடலில் குறிப்பிடுவதைக் காணலாம்.

பரம்பரை பரம்பரையாக வரும் சில குணப்பண்புகள் நீக்க முடியாமல் வலுப்பெற்றிருக்கும் என்பது இன்றைய விஞ்ஞான உலகமும் ஏற்றுள்ள முடிவாகும். இதனை நம் முன்னோர் அன்றே கண்டு போற்றியுள்ளனர்.

‘பழவடியார்க்குப் பண்டைப் பரிசே அருளும்’ என்பதனைக் கூர்ந்து நோக்குதல் இன்றியமையாதது. பழஅடியார் என்பது பரம்பரை பரம்பரையாக வந்து