பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22 * திருவாசகம் - சில சிந்தனைகள் - 2


விடப்பட்டோம் என்பதைப் புரிந்துகொண்டார். பிறகு பல தலங்களை வழிபட்டுக்கொண்டு செல்கையில் தோன்றிய எண்ணங்களுக்கு வடிவு கொடுக்கிறது இப்பாடல். எந்நேரமும் அகங்குழைந்து உருகிஉருகி ஊற்று எழும் கண்ணிர் அதனால் உடம்பு நனைந்து இருந்தார் ஆயினும், தம்முடைய ஆதர்ச புருஷராகிய கண்ணப்பரை ஒயாது நினைத்தலின், அவர்போன்ற அன்பும் உருக்கமும் தம்பால் இல்லையே என்று வருந்துவதை முதலடி தெரிவிக்கின்றது.

அடிகளார் செல்லுமிடங்களில் உள்ள திருக்கோயில்களில் பல அடியார்கள் திருத்தொண்டில் ஈடுபட்டுள்தைப் பார்க்கின்றார். அவர்களைப்போல, திருக்கோயிலை அலகிட்டு, மெழுக்கிட்டு, பூமாலை புனைந்தேத்தி வழிபட முடியவில்லையே என்ற வருத்தம் இடையிடையே தோன்றுகிறது. இத்தகைய திருப்பணிகளைச் செய்வதால் ஒரு வேளை தம்முடைய உருக்கமும் அன்பும் மிகுதிப்படுமோ என்ற எண்ணம் தோன்றியதால்போலும் இரண்டு, மூன்றாம் அடிகளில் தாம் இவற்றைச் செய்யவில்லையே என்று வருந்துகிறார்.

ஏதோ ஒரு திருக்கோயிலில் தங்கி இத்திருப்பணிகளில் ஈடுபடாமல் அவரைத் தடுத்தது யார்? தாராளமாக அவர் இந்தத் தொண்டுகளில் ஈடுபட்டிருக்கலாம். இவற்றில் ஈடுபடவேண்டும் என்ற விருப்பமும் அவர்பால் ஒரளவு இருந்திருக்க வேண்டும். பின்னர் ஏன் அதனைச் செய்யவில்லை; இந்தத் தொண்டுகளில் ஈடுபடுவதற்காக அவர் படைக்கப்படவில்லை. இத்தகைய தொண்டில் ஈடுபட்டிருந்தால், ஈடுபடும் தொண்டருக்கு ஆன்ம முன்னேற்றம் கிடைக்குமென்பது ஒருதலை, ஆனால் அடியார்களுடன் அவரை அழைத்துச் செல்லாமல் தில்லைக்கூத்தன் அவரை விட்டுச் சென்றதற்குக் காரணம், அவர் மூலம் பராஅமுதாகிய திருவாசகம் வெளிப்பட வேண்டும் என்பதுதானே! எனவே, ஓரிடத்தில் தங்கித்