பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/317

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

306 * திருவாசகம் - சில சிந்தனைகள் - 2


ஒழுக்கம், தன்மை என்ற பொருள்களையும் தரும். ஆதலால், யாரையும் கைகளைச் சேர்த்து வணங்கி அறியாதவன் என்று பலரும் கூறும் பொருளும் ஏற்றுக் கொள்ளத் தக்கதே ஆகும். இவ்வாறு கூறுவது அவனினும் மேம்பட்டவன் இல்லை என்ற கருத்தைத் தெரிவிப்பதற்கே ஆகும்.

188.

ஆனை ஆய்க் கீடம் ஆய் மானிடர் ஆய்த் தேவர் ஆய்
ஏனைப் பிறவு ஆய்ப் பிறந்து இறந்து எய்த்தேனை
ஊனையும் நின்று உருக்கி என் வினையை ஒட்டு உகந்து
தேனையும் பாலையும் கன்னலையும் ஒத்து இனிய
கோன்அவன் போல் வந்து என்னைத் தம் தொழும்பில் கொண்டருளும்
வானவன் பூம் கழலே பாடுதும் காண் அம்மானாய் 14


கீடம்-புழு. எனைப்பிறவாய்-மற்றைய பிறவிகளாய். கன்னல்-கருப்பஞ்சாறு. கோன்-தலைவன். தொழும்பு - அடிமை. ஓட்டுகந்து -விருப்பத்துடன் போக்கி.


முதுகெலும்பு உடைய பெரிய வடிவிற்கு யானையையும், அதற்கு முரணாக எலும்பே இல்லாத புழுவையும் கூறியதோடு நில்லாமல், பரு உடலை உடைய மனிதரையும், சூக்கும வடிவுடைய தேவரையும் ஒருங்கிணைத்து உயிர் வர்க்கச் சங்கிலியில் இப்பிறப்புக்கள் அனைத்தும் ஒவ்வொரு கணுவே ஆகும் என்ற விஞ்ஞானக் கருத்தைப் போகிறபோக்கில் அடிகளார் கூறியுள்ளார்.

இந்த பல்வேறு பிறப்புக்களில் எந்தப்பிறப்பை எய்துவது என்பது அந்த உயிரின் நல்வினை தீவினைகளைப் பொறுத்ததாகும். அப்படிப் பிறந்துள்ள தமக்குக் குருவடிவில் வந்திருந்து தம் அருளார் அமுதத்தை வாரி வழங்கினார். அதனை உண்டு அறியாத, நம்மைப் போன்றவர்களுக்கு விளங்கிக் கொள்ள வேண்டும்