பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/323

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

312 * திருவாசகம் - சில சிந்தனைகள் - 2


பிரபஞ்சத்தில் தோற்றம், இருப்பு, மறைவு என்ற மூன்றுக்கும் கட்டுப்பட்டு உள்ள எல்லாப் பொருள்களும் அழிந்த பின்னரும், தான் ஒருவனாக நிலைபெறுதலின் 'முற்றுக்கும் பின்னானை' என்றார்.

பிரபஞ்சத்தைப் படைத்தல், காத்தல், அழித்தல் முதலிய தொழில்களைச் செய்யும் ஆதி தேவர்கள் மூவரும் ஏனையோரிலும் மிக உயர்ந்து நிற்பவர்கள் ஆவர். அப்படி உயர்ந்து நிற்கின்ற அம்மூவருக்குமே தோற்றம், இருப்பு, மறைவு என்பவை உண்டாகலின் அவர்கள் தோன்றுவதற்கு முன்னர் இருந்தவன் என்பதை 'முன்னானை’ என்ற சொல்லால் குறிப்பிட்டார். அவர்கள் மறைந்த பின்னரும் அவன் ஒருவனே இருத்தலின் 'பின்னானை’ என்றார். மும்மூர்த்திகளும் சர்வசங்கார காலத்தில் அடைவதற்குரிய இடமாக இருத்தலின் 'முற்றுமாய்’ என்றார்.

அவனைத் தவிர ஏனையோருக்கெல்லாம் உயர்ந்து நிற்றலின் மூவரை முதலில் கூறினார். அடுத்துப் பிரபஞ்சத்தை கூறினார்.

‘பிஞ்ஞகன்’ என்பது ‘பிஞ்ஞம்’ என்று சொல்லப்படும் ஒரு வகைச் சடாபாரத்தை உடையவன் என்ற பொருளைத் தரும்.

194.
பெற்றி பிறர்க்கு அரிய பெம்மான் பெருந்துறையான்
கொற்றக் குதிரையின்மேல் வந்தருளித் தன் அடியார்
குற்றங்கள் நீக்கிக் குணம் கொண்டு கோதாட்டிச்
சுற்றிய சுற்றத் தொடர்வு அறுப்பான் தொல் புகழே
பற்றி இப் பாசத்தைப் பற்று அற நாம் பற்றுவான்
பற்றிய பேர் ஆனந்தம் பாடுதும் காண் அம்மானாய் 20

பெற்றி-தன்மை. பிறர்-அன்பரல்லாத பிறர். கோதாட்டி-சீராட்டி. பற்றி இப்பாசத்தைப் பற்றற-அநாதியே பற்றிநிற்கின்ற பாசத்தில் பற்றற்றுப்போகும்படி. நாம் பற்றுவான் பற்றிய