பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/330

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பின்னுரை * 319


இனத்திற்கும் வேறுபாடின்றி அருள்செய்வதைக் கீர்த்தித் திருஅகவலும், போற்றித்திருஅகவலும் பாடிச் செல்கின்றன.

இந்த மூன்று அகவல்களும் ஒரு புறம் நிற்க, சிவபுராணம் ஒரு மாபெரும் தத்துவத்தைச் சொற்களால் கூற முயலும் முயற்சியில் தொடங்குகிறது. அதைவிடச் சிறப்பு என்ன என்றால், அப்பாடலில் 'சிவபுராணம் தன்னைச் சிந்தை மகிழ, முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன் யான்' (திருவாச 1-1920) என்று பேசுகிறார் அடிகளார். இது ஆழ்ந்து சிந்திப்பதற்கு உரியது.

சிவபுராணத்திற்கு விரிவாக எழுதப்பெற்ற சிந்தனைப் பகுதியில் (திருவாசகம்-சில சிந்தனைகள்-Pt1) பாடல் செல்லும் முறையில் உரை கூறப் பெற்றுள்ளது. அதற்கு முற்றிலும் மாறாகத்தோன்றிய புதிய சிந்தனை, இங்கு இடம் பெறுகிறது. புதிய சிந்தனைகள் தோன்றும்பொழுது பழையவற்றிற்கு அவை மாறுபட்டவையாகவும் இருக்கலாம்.

திருஞானசம்பந்தருக்கு இரண்டு நூற்றாண்டுகள் கழித்துவரும் அடிகளார், திருவாசகம் முழுவதிலும் தம்மை நாயினும் கடையேன் என்று கூறிக்கொள்ளும் அடிகளார், ‘முந்தை வினைமுழுதும் ஓயச் சிவபுராணம்தன்னை உரைப்பன்’ என்று கூறுவது மிகப் புதுமையானது. இந்த ஒர் இடத்தைத் தவிர வேறு எங்கும் இக்கருத்து இடம் பெறவில்லை. இனி, இந்தத் தொடருக்குப் பொருள் செய்யும்பொழுது முன்னும் பின்னுமாக உள்ள சொற்களையும் தொடர்களையும் பின்வருமாறு கொண்டு கூட்டிப் பொருள் கொள்ளுதல் பயனுடையதாக இருக்கும்.

எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், மெய்யே. உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடுற்றேன்(1-31.32) சிவன் அவன் என் சிந்தையுள் நின்ற அதனால், அவன் அருளாலே அவன் தாள் வணங்கி, சிந்தை மகிழ முந்தை வினை முழுதும் ஓய (1,17-20), கண்ணுதலான் தன் கருணை