பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/331

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

320 * திருவாசகம் - சில சிந்தனைகள் - 2


எய்தி வந்து (1-21) கண் காட்ட சிவபுராணம் தன்னை (1.19) உரைப்பன் யான் (1,20).

இவ்வாறு கொண்டுகூட்டுச் செய்ததன் பொருள்: ‘ஓரறிவு உடைய புல்முதல் ஆறறிவுடைய மக்கள் உள்ளிட்ட எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தவனாகிய யான், இப்பொழுது சிவபுராணத்தைச் சொல்கின்றேன் என்று நினைக்க வேண்டா. உண்மை என்னவெனில் எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்து, இப்பிறவியை அடைந்து பொன்னடிகள் கண்டு வீடுற்ற என் சிந்தையுள், சிவன் அவன் வந்து புகுந்தான்; அதன் விளைவாக முந்தைவினை முழுதும் ஓய்ந்தது; அதன் பயனாக கவலைகளும் துன்பங்களும் நிறைந்திருந்த என் சிந்தை ஆனந்தத்தால் நிறைந்தது. அந்நிலையில் கண்ணுதலான் தன் கருணை, எய்தி வந்து வழி காட்ட, சிவபுராணம்தன்னை உரைப்பன் யான்’ என வரும்.

இவ்வாறு கூறுவதால், சிவபுராணம் என்ற பகுதியை, தம்முடைய பரந்த அனுபவம், அறிவு, கல்வி, பாடல் இயற்றும் ஆற்றல் என்பவற்றின் துணைகொண்டு தாம் பாடவில்லை என்பதை நுணுக்கமாகப் பெறவைக்கிறார் அடிகளார்.

எனவே, சிந்தையுள் அவன் நின்றதாலும், அவன் அருளைத் துணையாகக் கொண்டு அவன் திருவடிகளை வணங்கியதாலும், முந்தை வினைகள் முழுவதும் ஒய்ந்ததாலும், சிந்தையில் ஆனந்தம் நிரம்பியதாலும் அவன் கருணை வழிகாட்டியதாலும் சிவபுராணம் வெளிப்பட்டது. ‘உரைப்பன் யான் என்று தன்மை ஒருமை வினைமுற்றால் அடிகளார் கூறியிருப்பினும் மேலே கூறிய காரணங்களால் இந்த உரைப்பன் யான்’ என்பதற்கு அடிகளாரை முதன்மையாகக் கொள்ள வேண்டிய தேவையில்லை. உரைத்தலாகிய செயல் நிகழ, அடிகளாரின் திருவாய் பயன்பட்டது என்பது உண்மைதான். அந்த அளவில்