பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/338

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பின்னுரை * 327


சதகம் என்ற பெயர் அமைந்துள்ளது. காரைக்கால் அம்மையாரின் அற்புதத் திருவந்தாதி வெண்பாவில் அந்தாதித் தொடையாக அமைந்திருத்தலின் திருவந்தாதி என்ற பெயர் பெற்றது. அடிகளாரின் திருச்சதகமும் அந்தாதித் தொடையாக அமைந்திருத்தலின் அந்தாதி என்ற பெயர் பொருத்தமுடையதே ஆகும். ஆனால், கட்டளைக் கலித்துறை முதலிய பல்வேறு வகைப் பாடல்கள் இதனுள் இருத்தலின், அந்தாதி என்ற பெயரை விட்டுவிட்டுச் சதகம் என்ற பெயரைத் தந்தனர்போலும்.

ஒவ்வொரு பத்துப் பாடல்களுக்கும் ஓர் உள் தலைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. என்றாலும், பெரும்பான்மையான தலைப்புக்கள் அடுத்துள்ள பத்துப் பாடல்களுடன் எவ்வித பொருத்தமும் இன்றி அமைக்கப்பட்டுள்ளன. ஓரிரு தலைப்புக்கள் மிகப் பொருத்தமாக அமைந்துள்ளன. உள் தலைப்புகள் பொருத்தமில்லவிடினும் எல்லாப் பதிப்புகளிலும் இவை இடம் பெற்றுள்ளன. படிப்பவர் குழப்பமடையாமல் இருக்க இப்பதிப்பிலும் அந்த உள் தலைப்புகள் அப்படியே தரப்பெற்றுள்ளன.

பொருத்தமாக அமைந்த தலைப்புகளுள் மெய்யுணர்தல் என்ற முதல் தலைப்பு மிகச் சிறப்பாக அமைந்துள்ளது. மெய்அறிதல் என்று கூறுவதுதான் மரபு ஒன்று பொய்யா அல்லது மெய்யா என்பதை அறிவின் துணைகொண்டுதான் அறியமுடியும். ஒன்றை மெய்ம்மையானது அல்லது உண்மையானது என்பதை அறிந்து கொண்டால், மனத்தில் ஒரு திருப்தி ஏற்படும். அறிவின் துணைகொண்டு ஆராய்ந்து அறியப்படும் எந்த ஒன்றும் முடிவானது என்று சொல்வதற்கில்லை. அறிவின் துணைகொண்டு வளரும் விஞ்ஞானத்தில், இன்று மெய்ம்மை என்று கருதப்பட்ட ஒன்று, அறிவு வளர வளர நாளை மாறிவிடுவதைக் காண்கிறோம். இங்கு மெய் என்று