பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/349

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

338 * திருவாசகம் - சில சிந்தனைகள் - 2


இதனை அடுத்த, மூன்று பாடல்களில் வாழ்த்துதலுக்கு அப்பாற்பட்டு நிற்கும் அவனுடைய அருமை, பெருமைகளைப் பேசுகின்றார்.

மெய்யுணர்ந்த நிலையில் இருந்து விடுபட்டு, தம் நிலைக்கு மீண்ட நிலையில் இந்தப் பத்துப் பாடல்களும் இடம் பெறுகின்றன. அதிலும் ஒரு புதுமை உள்ளது. முதல் இரண்டு பாடல்கள் அநுபவநிலையில் பெற்ற இன்பத்தைக் குறிக்கின்றன. அந்த அநுபவத்தின் பயனாகத் தலைவன் எத்தகையவன் என்பதையும் அறிந்துகொண்டதை அடுத்த எட்டுப் பாடல்களும் குறிக்கின்றன.

இதன் கடைசி இரண்டு பாடல்களும் அறிவுறுத்தல் என்ற தலைப்புக்குப் பொருத்தமாக அமைந்துள்ளன. இத்துணை நேரம் எங்கோ சஞ்சரித்துக்கொண்டிருந்த அந்த மனம், திடீரென்று தன் இயல்பைக் காட்டத் தொடங்கி விட்டது. தூரத்தே குருநாதரைக் கண்டதிலிருந்து, அவர் திருவருளைப் பெற்றுச் சுயநினைவுக்கு வரும்வரை அடங்கி ஒடுங்கிப் பெட்டிப் பாம்புபோல் இருந்த மனம், இப்பொழுது லேசாகத் தலை தூக்குகிறது. சராசரி மனிதர்களுக்குரிய சாதாரணப் பாலுணர்ச்சி மெள்ளத் தலை தூக்குகிறது. 23ஆம் பாடலில் வரும் முதல் இரண்டடிகள் மனம் தன் புத்தியைக் காட்டும் நிலையை அறிவிக்கின்றன. அந்த மனத் தொடர்பிலிருந்து தம்மைப் பிரித்துக்கொண்ட அடிகளார், குரங்கின் தலையில் குச்சியால் தட்டும் குரங்காட்டிபோலப் பாழ் நெஞ்சே என்ற சொற்களின் மூலம் அந்த மனத்தின் தலையைத் தட்டுகிறார். தட்டியவுடன் குரங்கு குரங்காட்டியின் பக்கத்தில் பணிவுடன் நிற்பதுபோல அந்த நெஞ்சம் அடிகளாரின் அண்மையில் பணிந்து நிற்கின்றது.

அந்த நெஞ்சை நோக்கி 'ஏ நெஞ்சே! நீ செய்த அடாத காரியத்தைப் பார்த்தாயா? தவறான