பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/355

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

344 * திருவாசகம் - சில சிந்தனைகள் - 2


காப்பாற்றுகின்றேன், இது என்ன கொடுமை? என்ற கருத்தே 42ஆவது பாடலில் பேசப்படுகின்றது.

நெடுங்காலம் பிரிந்துள்ளோம், இந்த உடம்பைத் காப்பாற்றுகின்றோம் என்ற எண்ணம் தோன்றியவுடன் அவனுடைய கருணைப்பெருக்கும், தம் சிறுமையின் எல்லையும் வெளிப்படுதலின் தீயில் புகுந்தோ, மலையிலிருந்து உருண்டோ உடம்பைப் போக்கிகொள்ள வேண்டும் என்று நினைக்கின்றார்.

திருச்சதகத்தில் இதுவரை கண்ட நாற்பது பாடல்களில் இறையநுபவப் பெருக்கு, அதில் ஆழ்தல், மீட்டு வெளிவருதல் என்பவைபற்றிப் பாடும்பொழுதே எந்நேரமும் அந்த இறையநுபவத்தில் மூழ்கியிராமல் வெளியே வந்துவிடும் நெஞ்சை நோக்கி, ஏசிப் பேசுகின்ற பாடல்களும் இடம் பெற்றுள்ளன.

இந்த நாற்பது பாடல்களில் இரண்டு பாடல்களில் (23, 44) மகளிர் பற்றிய குறிப்பு வருகிறது. இந்தப் பால் உணர்வே தாம் ஈடுபாட்டை இழப்பதற்குக் காரணம் என்று நினைக்கின்றார் அடிகளார். அநுபவ வளர்ச்சியைக் கூறிக்கொண்டுவரும் நாற்பது பாடல்களில் அந்த அநுபவ இடையீடு, பால் உணர்வால் ஏற்பட்டது என்பதை அப்படியே குறிக்கின்றார் அடிகளார்.

ஆத்தும சுத்தி என்ற தலைப்பிற்கும், இந்தப் பத்துப் பாடல்களுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்பதை விளங்கிக்கொள்ள முடியும்.

தம் விருப்பம்போல் தலைப்புகள் கொடுக்க யாருக்கும் உரிமை இல்லை. திருவாசகப் பாடல்களின் இயல்பை அறியாதவர்கள் தரும் ஆத்தும சுத்தி போன்ற உள்தலைப்புகள் பின்னே வருகின்றவர்களைக் குழப்பிவிடுகின்றன. இத்தலைப்புகள் பொருந்தும்படியாக