பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/356

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பின்னுரை * 345


விளக்கம் தரவேண்டும் என்ற விருப்பத்தினால், குழப்பத்தை மிகுதிப்படுத்துகின்றனர்.

நாற்பத்தைந்து முதல் ஐம்பத்து நான்கு வரை உள்ள பாடல்களும் இதுவரை கூறிய கருத்துக்களையே மீட்டும் கூறுகின்றன.

இந்தப் பத்து பாடல்களில், மூன்று பாடல்கள் (46, 51, 47 சிந்திக்கத் தக்கன. குருநாதராக வந்து ஆட்கொண்டு அருள்புரிந்து மறைந்துவிட்ட பிறகு, மானுட வடிவில் வந்த அவர் யார் என்பதை நன்கு உணர்ந்துகொண்ட அடிகளார், ஒரு விநாடி நேரம் அந்த உணர்விற்கு ஒய்வு கொடுத்துவிட்டு, தம் அறிவு கொண்டு குருநாதராக வந்தவரை ஆராய்கின்றார். இந்த மெய்ஞ்ஞானியின் விஞ்ஞானப் பார்வையில் தம்மை ஆண்டுகொண்ட கூத்தன், கூத்தனாகமட்டு மில்லாமல் எல்லையற்ற வனாகவும், காலதத்துவமாகவும் உள்ளான் என்பது தெரிகின்றது. இந்த விஞ்ஞானப் பார்வை, பொருளின் இயல்பை அறிவு கொண்டு ஆராய்ந்ததில் கிடைத்த விளக்கம் என்பது உண்மைதான். இந்த விளக்கத்தை அறிந்துகொண்டதால், அடிகளாருக்கு அச்சம் இருந்ததேதவிரக் கூத்தனிடம் நெருக்கம் ஏற்படவில்லை. ஒரு பொருளிடம் நெருக்கம் ஏற்படவேண்டுமாயின் அங்கு அறிவு தொழிற்பட்டுப் பயனில்லை. அந்த அறிவு பொருளின் பெருமையையும், தனது சிறுமையையும் சுட்டிக்கொண்டே இருக்குமாதலின் நெருக்கம் ஏற்பட வழியே இல்லை.

எனவே, அடிகளார். இந்த அறிவு ஆராய்ச்சியை விட்டுவிட்டு, உணர்வின் துணைகொண்டு கூத்தனைப் பார்க்கின்றார். அந்த உணர்வின் பெருக்கம் பொருளிடம் நெருக்கத்தை உண்டாக்குகின்றது. அதன் பயனாக, “யாவருஞ் சிந்தையாலும் அறிவருஞ் செல்வன், முந்தி என்னுள் புகுந்தனன் (5) என்றும், தொண்டனேற்கு