பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/361

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

350 * திருவாசகம் - சில சிந்தனைகள் - 2


செயல்களை வெளியிடச் செய்யும் அன்பு என்பதால் இதனை 'மெய் கலந்த அன்பு' என்று கூறினார் போலும்.

'மெய் கலந்த அன்பர்' என்ற தொடரால் அடிகளார் இத்தகைய அன்பர்களை இனம் பிரித்துக் காட்டுகிறார். இந்த மெய் கலந்த அன்பர் அன்பில், துன்பத்திற்கோ துயரத்திற்கோ நிலையாமைக்கோ இடமே இல்லை. இவர்கள் அன்பு ஆனந்தமயமானது, நிலையானது. இதன் பயனாகவே இவர்கள் நாள் முழுவதும் நையும் உள்ளத்தோடு தலைமேல் ஏறிய கையராய், கண்ணிரை ஆறாகப் பெருக்கிக்கொண்டு நிற்கின்றனர்.

இதனையே சேக்கிழார் பெருமான் 'இறவாத இன்ப அன்பு'(பெ.பு-காரைக்கால் 60) என்று பேசுகிறார்.

இத்தகைய பெருமக்களின் அன்பு, எத்தகையது என்பதை ஒருவாறு அறிந்துகொண்ட அடிகளார், அத்தகைய அன்பு தமக்கும் வேண்டும் என்ற கேட்கின்றார்.

அடுத்து வரும் பத்துப் பாடல்கள் (85-94) முன்னர் உள்ள பத்துப் பாடல்களோடு ஒரளவு மாறுபட்ட நிலையில் அமைந்துள்ளன. திருப்பெருந்துறை அனுபவம் கடந்த நிலையில், மனம் வருத்தி அந்த அதுபவம் மீட்டும் தமக்கு வரவேண்டும் என்று பேசும் நிலையில் அமைந்துள்ளன இப்பாடல்கள்.

திருப்பெருந்துறையில் கிடைத்த இறையனுபவமும் அடியார் கூட்டமும் தம்மை விட்டுப் போயினமைக்குத் தம்முடைய வாழ்க்கையில் ஏதோவொரு பெருங்குறை உள்ளதுபோலும் என்று நினைத்த அடிகளார், அது எதுவாக இருக்கும் என்ற ஆராய்ச்சியில் ஈடுபடுகின்றார். சென்ற 77ஆவது பாடலின் இறுதியில், 'மெய் கலந்த அன்பர் அன்பு எனக்குமாக வேண்டும்’ என்று வேண்டி நின்றவர், அக்கருத்தை மேலும் தொடராமல் இறைவனிடம்