பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/363

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

352 * திருவாசகம் - சில சிந்தனைகள் - 2


அநுபவத்தைத் தருவார் என்ற முடிவுக்கு வருகிறார் அடிகளார்.

திருச்சதகத்தின் கடைசிப் பத்துப் பாடல்கள் அடிகளார் மனத்தில் மறுபடியும் துளிர்த்த புது நம்பிக்கையை வெளிப்படுத்துவதாக உள்ளன.

பொய்யோடு தம்மைத் தொடர்புபடுத்தி அதனாலேயே தாம் அவரைவிட்டுப் பிரிய நேர்ந்தது என்று சென்ற பத்துப் பாடல்களில் வருந்திய அடிகளார், இப்பொழுது புதிய கருத்தொன்றைப் பேசுகிறார். மனித வாழ்க்கையில் இயல்பாக நடைபெறுகின்ற ஒன்று உண்டு. கையில் ஒரு பொருள் கிடைத்தால் அதன் அருமைப்பாடு தெரியாமல் எளிதில் அதனை இழந்துவிடுவதும் உண்டு. அதுபோலத் திருப்பெருந்துறையில் எளிதில் தமக்குக் கிடைத்த குருநாதரையும் அவர் தந்த அனுபவத்தையும் கிடைத்தற் கரியது என்று அதன் அருமைப்பாட்டை அறிந்து போற்றி வைத்துக்கொள்ளாமல் அலட்சியமாக இருந்துவிட்ட தாகவும், அதனாலேயே அந்த அநுபவம் கழன்று போயிற்று என்றும், ஒர் எண்ணம் அடிகளார் மனத்தில் தோன்றியது போலும், அதன் பயனாகவே 'மையிலங்கு நற் கண்ணி பயங்கனே’ (96) என்ற பாடல் வெளிவருகிறது.

சென்ற பத்துப் பாடல்களில் தம்மை பொய்யன் என்று கூறிவிட்டு, இப்பொழுது அவர் அருமை தெரியாமல் கவனக்குறைவோடு இருந்தமையின் அவர் நழுவிவிட்டார் என்று பேசிக்கொண்டே வந்த அடிகளாருக்கு, ஒர் ஊக்கம் கிடைத்தது. அந்த ஊக்கம் பிறக்கத் திருப்பெருந்துறை நிகழ்ச்சியே காரணமாய் அமைகின்றது.

அமைச்சராக இருந்த தாம், அதிகாரம் காரணமாகக் கடமை என்ற பெயரில் பிறர்மாட்டுச் செலுத்த வேண்டிய அன்பை மறந்து, மனத்தைக் கல்லாக ஆக்கிக் கொண்டிருக்க வேண்டும். திருப்பெருந்துறைக்காரர் ஒரே