பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/373

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

362 * திருவாசகம் - சில சிந்தனைகள் - 2


பிழையுளன பொறுத்திடுவர் என்று அடியேன்

பிழைத்தக்கால்

பழியதனைப் பாராதே படலம் என் கண் மறைப்பித்தாய்

(திருமுறை: 7-89-)

அன்றில் முட்டாது அடையுஞ் சோலை ஆரூர் அகத்தீரே
கன்று முட்டி உண்ணச் சுரந்த காலி அவை போல
என்றும் முட்டாப் பாடும் அடியார் தம் கண் காணாது
குன்றில் முட்டிக் குழியில் வீழ்ந்தால் வாழ்ந்து போதிரே

(திருமுறை: 7-95-3)

விற்றுக் கொள்வீர் ஒற்றி யல்லேன் விரும்பி ஆட்பட்டேன்
குற்றம் ஒன்றும் செய்தது இல்லை கொத்தை ஆக்கினீர்
எற்றுக்கு அடிகேள் என் கண் கொண்டிர் நீரே பழிப்பட்டீர்
மற்றைக் கண்தான் தாராது ஒழிந்தால் வாழ்ந்து போதீரே

(திருமுறை: 7-95-2)

பாரூர் அறிய என்கண் கொண்டிர் நீரே பழிப்பட்டீர்

(திருமுறை: 7-95-11)

அடிமைத் திறம் கொண்ட இருவர், தோழமைத் திறம் போற்றிய ஒருவர் ஆகிய மூவருமே இறைவனை எச்சரித்தல், அவனிடம் பிணங்கிக்கொள்ளுதல், கேலி செய்தல் ஆகிய செயல்களில் ஈடுபடுவதைக் கண்டோம். இதன் அடிப்படைபற்றிச் சற்றுச் சிந்திப்பது நலம்.

பெரிய அளவில் இறை நம்பிக்கை உடையவர்கள் இரு வகைப்படுவர். ஒரு சாரார் ஓரளவு அறிவின் துணை கொண்டு அவனைப்பற்றிய ஆய்வில் தொடங்கி, இறுதியாக அனைத்திற்கும் காரணம் அவன்; எங்கும் எல்லாவற்றிலும் ஊடுருவி நிறைந்தும் அவற்றை விட்டு வெளியே தனித்தும் நிற்பவன் அவன், என்பதை அறிகின்றார்கள். இந்த ஞானத்தின் அடிப்படையில் இப் பெருமக்களுக்கு இறை பக்தி அல்லது இறையுணர்வு ஏற்படுகிறது. எந்த நிலையிலும் இறைவன் மேம்பட்டவன்