பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/383

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

372 * திருவாசகம் - சில சிந்தனைகள் - 2


மணிவாசகப் பெருமானுக்கு ஏறத்தாழ ஒரு நூற்றாண்டுக்கு முற்பட்டவராகிய கோதைநாச்சியார் தாம் பாடிய திருப்பாவையில் பாவை நோன்பு, அந்த நோன்பிற்கு வேண்டிய பொருள்கள், நோன்பு நோற்கும் முறை ஆகியவைபற்றி விரிவாகப் பேசுகிறார். ஆனால், அடிகளாரின் திருவெம்பாவையில் நோன்பைப்பற்றிய எவ்விதக் குறிப்பும் இல்லை. இதை மனத்துட் கொண்டு பார்த்தால், பழைய பாவை நோன்பின் ஒரேயொரு பகுதியைமட்டும் அடிகளார் எடுத்துக்கொண்டுள்ளார். என்பது தெரியவருகிறது.

விழித்தெழுந்த பல பெண்கள் ஒன்றுகூடி இறைவன் புகழைப் பாடிக்கொண்டு தெருவிலே சென்று, தங்களுள் ஒருத்தியைக் காணாமையால் அவள் இல்லம் சென்று அவளை எழுப்புவதாக உள்ள பகுதி. திருப்பாவை, திருவெம்பாவை என்ற இரண்டிற்கும் பொதுவாகவுள்ளது. இதனைக் கூறவரும் திருவெம்பாவையின் முதல் எட்டுப் பாடல்கள் வேறு ஏதோ ஒரு கருத்தை மனத்துட் கொண்டு, இந்த மரபையும் ஏற்றுக்கொண்டு பாடியதுபோலத் தெரிகிறது.

மனித மனம் எப்பொழுதும் ஒரே நிலையில் நின்று இயங்குவதில்லை. உறங்குகின்ற பெண்ணைப்பற்றிக் கூறவரும் திருவெம்பாவை, அப்பெண் சாதாரண காலத்தில் எப்பொழுதும் என்ன நினைத்தாள், என்ன பேசினாள் என்பதை 'இராப்பகல் நாம் பேசும்போது எப்போதும் பாசம் பரஞ்சோதிக்கு என்பாய்’ என்ற சொற்களாலும் 'முன்வந்து எதிர் எழுந்து என் அத்தன் ஆனந்தன் அமுதன் என்று அள்ளுறித் தித்திக்கப் பேசுவாய்’ என்ற சொற்களாலும் மிக அழகாக எடுத்துரைக் கின்றது. மேலும், அப்பெண்கள் 'எத்தோ நின் அன்புடைமை எல்லோம் அறியோமோ' என்று கூறு முகத்தால், அவளின் அன்பின் ஆழத்தைத் தாம் நன்கு