பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/385

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

374 * திருவாசகம் - சில சிந்தனைகள் - 2


பாடலிலேயே அவளது உறக்கத்தின் சிறப்புப் பேசப் பெறுகிறது.

தோழிமார்கூட்டம் இறைவன் புகழைப் பாடிக் கொண்டு தெருவழியே வந்து இவள் வீட்டு முன்றிலில் நிற்கின்றது. அப்பொழுது உள்ளே என்ன நடைபெறுகிறது என்பதைத் தோழிகளில் ஒருத்தி கூர்ந்து கவனித்துச் சொல்லுகின்றாள். ‘வாழ்த்தொலி வீதிவாய்க் கேட்டலும் விம்மிவிம்மி மெய்ம்மறந்து கிடந்தாள்’ என்று கூறுகிறாள் அத்தோழி. எனவே, உள்ளிருப்பவளின் உறக்கம், ஏனையோரின் உறக்கம்போன்றது அன்று என்பது வெளிப்படுகின்றது. இறைவன்பற்றிய ஒலி காதில் நுழைகிறது; உடனே விம்முகிறாள், மெய்ம்மறக்கின்றாள்; அதன் விளைவாக உடல் செயலற்றுக் கிடக்கின்றது.

இறைவன் புகழைக் காதால் கேட்டவுடன் சமாதி நிலையை அடையும் பகவான் இராமகிருஷ்ணரின் வாழ்க்கை, இப்பகுதிக்கு விளக்கம் தருகிறது. இப்படிப்பட்ட ஒருத்தியின் சமாதி நிலையை நன்கு புரிந்துகொள்ளாமல் தோழிமார் நையாண்டி செய்கின்றனர்.

சமாதி நிலை கலைந்தபொழுது இவளும் புறத்தே நிற்கின்ற தோழிமாரைப் பார்த்து, 'எல்லோரும் வந்து விட்டனரோ? நீங்கள் பழை அடீயிர், நாங்கள் புத்தடியோம்’ என்றெல்லாம் பேசுகிறாள்.

சமாதி நிலைக்குச் செல்லக்கூடிய ஒருவரைப் புறத்தே உள்ளவர்கள் எளிதில் புரிந்துகொள்வது இயலாத காரியம். அந்த நிலைதான் இங்கேயும் நிகழ்கின்றது. முதல் பாடலிலேயே கேட்டல், விம்முதல், மெய்ம்மறத்தல். கட்டைபோல் கிடத்தல் என்ற சமாதி நிலைக்கான எல்லா நிலைகளும் பேசப்பெற்றுவிட்டமையின், உள்ளே உறங்குபவள் சோம்பலில் உறங்கவில்லை என்பதையும், புறத்தே நிற்கின்றவர்களும் அவளுடைய உண்மை