பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/386

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பின்னுரை * 375


நிலையைப் புரிந்துகொள்ளவில்லை என்பதையும் அடிகளார் விளங்கவைக்கின்றார்.

விழித்துக்கொண்டிருக்கும்போது தன் உறுதிப்பாட்டை வெளிப்படுத்திப் பேசிய அவள், தனக்குச் சமாதிநிலை கைகூடியதைத் தோழிமாரிடம் கூறினாளில்லை. அத் தோழிமாரும் அவளது வளர்ச்சியை அறிந்தார்களில்லை. எனவேதான், உறங்குகின்றவளைப் 'பொக்கங்களே பேசும் பாலூறு தேன்வாய்ப் படீறீ' என்று எள்ளி நகையாடுகின்றனர். இதன் பிறகு, உறங்குகின்றவள் வெளியே எழுந்துவந்து, எல்லோருடனும் சேர்ந்து நீராடச் செல்வதாகப் பாடல்கள் அமைகின்றன.

உறங்கி எழுந்து வந்த அவள், புறத்தே உள்ளவர்களுக்குத் தலைமை வகித்து நீராட அழைத்துச் செல்கிறாள் என்று நினைப்பதில் தவறில்லை.

ஒருத்தி உள்ளே உறங்குகின்றாள், அவளை ஏனையோர் வந்து எழுப்புகின்றனர் என்று சொல்லப்பட்ட பழைய மரபுபற்றியே இதுவரை பலரும் பொருள் கூறியுள்ளனர். இவ்வாறு கூறுவதில் உள்ள குறைபாட்டை உணர்ந்த ஒருவர் நவ கன்னிகைகள், ஒருவரை ஒருவர் எழுப்ப முற்பட்டனர் என்று பொருள் கண்டார். அவ்வாறு கூறுவதால் தெய்வங்களாகிய நவ கன்னிகைகளைக்கூட இந்த உரையாசிரியர் தூங்குமூஞ்சிகளாகக் காட்டிவிட்டார்.

இவை அனைத்தும் மணிவாசகரின் பாடல் போக்கிற்குப் பொருந்தி வாராமையின் முன்னர்க் கூறிய முறையில் சிந்தனை செல்லலாயிற்று.

தெருவில் பாடிக்கொண்டுவந்த மகளிர் இறைவன் புகழைப் பாடினர் என்பது உண்மைதான். ஆனால், பாடுகின்ற அவர்கள் வாழ்க்கையில் என்ன குறிக்கோளை வைத்திருந்தனர், என்ன வேண்டிக்கொள்ள விரும்பினர்