பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/388

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பின்னுரை * 377


உறுதிப்பாட்டுடன் கூறுவது சராசரி மகளிரின் சக்திக்கு அப்பாற்பட்டதாகும். எனவேதான், சமாதி நிலையிலிருந்து எழுந்துவந்து தலைமை வகித்த பெண்ணின் கூற்று இது என்று சிந்திப்பதில் தவறில்லை.

அடுத்தபடியாக இப்பெண்களின் கூற்றாக வருவது ‘என்ன குறையும் இலோம்' என்பதாகும். உயிர்களாகப் பிறந்த அனைவர்க்கும் குறைகள் இருந்தே தீரும். குறையிலாதவன் ஈசன் ஒருவனே. அப்படியிருக்க, ‘என்ன குறையுமிலோம்’ என்று சொல்வது எப்படி நியாயமாகும்? என்றாலும், சமாதிநிலை கலைந்துவந்தவளின் உயர்விற்கும் உறுதிப்பாட்டிற்கும் 'என்ன குறையும் இலோம்' என்று சொல்வது பொருத்தமுடையதே ஆகும். அதனாலேயே இதனை இரண்டாவது காரணமாகச் சிந்திக்க முடிகிறது.

தனி மனிதன் அல்லது ஒரு பெண் என்பவர்களுக்கு மனம் என்ற ஒன்று இருந்தே தீரும். அந்த மனத்தை ஆட்டிப்படைப்பது நான் என்ற அகங்காரமாகும். அந்த மனம், மொழிகளின்வழி நின்று தன் விருப்பத்தைப் பூர்த்தி செய்துகொள்கிறது. அந்த விருப்பம் தோன்றக்கூடக் காரணம் அகங்காரமே ஆகும். அந்த நான் அழிந்தால், அல்லது செயலற்றுவிட்டால் குறை என்று ஒன்று தோன்றக் காரணமே இல்லை. சமாதி கலைந்துவந்த பெருமாட்டி, ஆணவம் செயலற்றுப் போக, ஓர் அற்புதமான வழியைக் கையாள்கின்றாள்.

ஒரு மோட்டார்க் காரை நாம் ஒட்டிச் செல்லுகின்ற போது, சாலை, சாலையில் தோன்றும் இடையூறுகள், அவற்றைக் கடந்து செல்லும் வழிவகைகள் ஆகியவற்றை ஓட்டுபவர்களாகிய நாமே விநாடிதோறும் ஓயாமல் கவனித்துக்கொள்ள வேண்டும். இத்தனை பொறுப்புக்களும் நமக்கு ஏன் வருகிறது? நாமே வண்டியை ஓட்டத்