பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/392

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பின்னுரை * 381


இவ்வாறு கூறிக்கொண்டு, தலைவன் யார் என்று அறுதியிட்டுக் கூற முடியாத நிலையில் அத்தலைவி தோழிகளோடு சேர்ந்து மொய் ஆர் தடம் பொய்கை புக்கு, கையால் குடைந்து குடைந்து விளையாடினாள்.

அப்படி விளையாடும்போது வாய்கள் என்ன செய்தன? அவன் திருவடிகளைப் புகழ்ந்து பாடின. என்ன சொல்லிப் புகழ்ந்தன? 'செய்யா! வெண்ணிறு ஆடீ! செல்வா! சிறு மருங்குல் மையார் தடங்கண் மடந்தை மணவாளா ஐயா!’ என்று கூறியதோடு நிறுத்தாமல் 'நின் விளையாட்டின் உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உய்ந்து ஒழிந்தோம்’ என்று கூறிப் புகழ்ந்தன. மொழியும், மெய்யும் இணைந்து செயற்பட்டதை இப்பாடலில் கூறினார் அடிகளார். மனத்தின் உதவியின்றி இங்ஙனம் அவனைப் புகழ்ந்துரைத்திருத்தல் முடியாது. எனவே, மனமும் சேர்ந்தே தொழிற்பட்டது என்பது அருத்தா பத்தியால் பெற்றாம்.

அடுத்துவரும் பாடலில் மனத்தின் தொழிலை அடிகளார் விளக்கமாகவே சொல்கிறார். தில்லையில் கூத்தாடும் பெருமான், தீர்த்தன் (தூய்மையே வடிவானவன்), தீயாடுபவன் ஆவான். இப்படி ஆடிக்கொண்டே அண்டபிண்ட சராசரம் அனைத்தையும் படைத்தும், காத்தும், கரந்தும் விளையாடுகின்றான் என்று கூறுவதால், அவனது புற வடிவத்தையும் அவன் தொழிலையும் மனத்தால் நினைந்து சொல்லால் வடிக்கிறாள். அத்தலைவி.

இவ்வாறு தலைவன் யார், அவன் சிறப்பென்ன, அவன் செய்தொழில்கள் யாவை என்பவற்றை நீராடிக் கொண்டே தலைவி சொல்லும்போது, உடன் நீராடும் தோழிமார்களுக்கு உண்மை விளங்கலாயிற்று. அதுவரை ‘எங்கோ கற்பனைக்கு எட்டாத தூரத்தில், விண்ணில் இருக்கிறான் இறைவன்' என்றுகொண்ட எண்ணம்