பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/395

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

384 * திருவாசகம் - சில சிந்தனைகள் - 2


என்று நினைத்து அஞ்சவேண்டா! அதே பாதமலர் இங்கு நம் ஒவ்வொருவருடைய இல்லந்தோறும் எழுந்தருள்கின்றது. எதற்காக நம்தம்மைக் கோதாட்டுவதற்காக' என்று, அஞ்சிக்கிடக்கும் மானிட உயிருக்கு அச்சம் தீர்த்து ஊக்கம் தரும் முறையில் இப்பாடல் அமைந்துள்ளது.

இவ்வாறு கூறுவதிலும் ஒரு பிழை உண்டாகிவிடும். நம் இல்லந்தோறும் அத்திருவடிகள் எழுந்தருளுகின்றன என்றால், அதன் சிறப்பைக் குறைத்து மதிப்பிட்டுவிட நேரிடும். அக்குறையைப் போக்கவே இல்லங்கள் தோறும் எழுந்தருளும் அந்தப் பாதமலர், எத்தகையது தெரியுமா என்ற வினாவிற்கு விடை கூறுவதுபோல் அடுத்த பாடல் அமைந்துள்ளது. அண்ணாமலையான் திருவடி, பெண் ஆகி, ஆணாய், அலியாய், பிறங்கு ஒலிசேர் விண் ஆகி, மண் ஆகி, இத்தனையும் வேறாகி நிற்கின்றது.

‘ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும் சோதி' என்று வடிவற்ற ஒளிப்பிழம்பாக இருக்கின்றான் இறைவன் என்று தொடங்கும் திருவெம்பாவைப் பாடல், அவனுக்கு ஓர் அழகிய வடிவைக் கொடுத்து அவனுடைய திருவடியைப் புகழும் முறையில் ‘கண்ணார் அமுதமாய் நின்றான் கழல்’ (172) என்று நிறைவு செய்கிறது.

ஒளியைக் கூறியதன் நோக்கம் அனைத்தையும் ஊடுருவிச் செல்லும் இயல்பை உணர்த்துவதற்கே ஆகும். ஊருடுருவிச் செல்லும் இதனை நம்முடைய சிறிய மனத்துள் நிறுத்த இயலாது. ஆதலின், நின்றான் கழல் என்று நம்முடைய கட்புலனுக்கும் மனத்திற்கும் தெரிவிக்கின்ற முறையில் திருவடிப் பெருமை பேசிற்று.

மேலே 163 ஆவது பாடலில் மிக்க உறுதிப்பாட்டுடன் 'சீரடியோம்’ என்றும், கணவர் ஆவார்’ என்றும், பணி செய்வோம்’ என்றும் கூறிய அப்பெருமாட்டி 173 ஆவது பாடலில் சேரற்க, செய்யற்க, காணற்க என்று பாடுவதன்