பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/396

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பின்னுரை * 385


நோக்கம் யாது? இந்த இரண்டு பாடல்களையும் ஒருசேர வைத்துப்பார்த்தால் பல சிந்தனைகள் தோன்றுகின்றன. சேரற்க காணற்க என்ற பாடல் முன்னர் வந்து, ஆவார் பணிசெய்வோம் என்ற பாடல் பின்னர் வந்திருந்தால் ஒருவேளை பொருத்தமாக இருந்திருக்கலாம். ஆனால், தலைகீழாக இவை இரண்டும் அமைந்துள்ளன. ஏன் என்று சிந்திக்கத் தொடங்கினால், மனித மனத்தின் கூறுபாட்டை மிகத் தெளிவாக உணர்ந்த அடிகளார், வேண்டுமென்றே இந்த முறைவைப்பைப் பின்பற்றியுள்ளார் என்பது புலப்படும்.

புத்தாண்டின் தொடக்கத்தில் சில நல்ல தீர்மானங்களை நினைந்து, அந்த ஆண்டு முழுவதும் அவற்றைப் பின்பற்ற வேண்டும் என்ற முடிவிற்கு வருகின்றோம். இவற்றைச் செய்தேதீரவேண்டும் என்ற முடிவு மனத்திடைத் தோன்றும்பொழுது ஐயப்பாட்டிற்கோ மனத்திண்மை இன்மைக்கோ அங்கு இடமேயில்லை. ஆனால், பதினைந்து நாட்களில் இந்தத் தீர்மானங்கள் நம்மைவிட்டு மெல்ல மறையத் தொடங்கிவிடுகின்றன. இன்னும் சில நாட்களில் தீர்மானம் இருந்த சுவடே தெரியாமல் போய்விடுகிறது. எந்தச் சராசரி மனிதனின் மனப்பாங்கிற்கும் இதுவே இலக்கணமாகும். இதனை மனத்துட் கொண்ட அடிகளார், திருவெம்பாவையின் முதற்பாடலில் காணப்பெறும் தலைவியின் கூற்றாக ஆவோம், பணிசெய்வோம் என்று உடன்பாட்டு முகத்தால் 163ஆம் பாடலில் பாடிவிட்டார்.

அதன் பிறகு ஒன்பது பாடல்களில் இந்த வளர்ச்சி பேசப்படுகிறது. 'பைங்குவளைக் கார் மலரால்...' (6) என்று தொடங்கும் பாடலில், தாங்கள் அன்றாடம் நீராடும் குளத்தையே இறைவன் இறைவி வடிவாகக் காணும் புதிய மனோநிலை வந்துவிடுகிறது. இந்த வளர்ச்சியின் முடிவில் அனைத்தையும் படைக்கும் இறைவன், அனைத்தையும்