பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/399

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

388 * திருவாசகம் - சில சிந்தனைகள் - 2


திருவாதவூரராக அமைச்சர் பதவியிலிருந்து உலகியலில் முழுவதுமாக மூழ்கியிருந்த ஒருவரைப் பெருந்துறையிலிருந்த குருநாதர் இழுத்துப் பிடித்துத் தம் திருவடிகளில் விழுமாறு செய்தார். குதிரையிலிருந்து இறங்கிக் குருநாதரிடம் வருகின்றவரை அவருடைய மானிட வடிவம், அவருடைய இரண்டு பாதங்கள் என்பவை திருவாதவூரரின் கண்களில் நன்கு பட்டுக்கொண்டிருந்தது உண்மை. அத்திருவடிகளைப் பற்றிக்கொண்டு, வீழ்ந்து வணங்கி எழுந்தவுடன் ஒரே விநாடியில் திருவாதவூரரும், அமைச்சரும் முற்றிலுமாக மறைந்துவிட, அங்கே மணிவாசகர் தோன்றினார். தம்முடைய இந்த மாற்றத்திற்குக் குருநாதரைவிட அவருடைய திருவடிகளே காரணம் என்று அடிகளார் முழுமையாக நம்பியமையே, அவர் திருவடிகளைப்பற்றி இவ்வளவு அதிகமான பாடல்களில் பாடியமைக்குரிய காரணமாகும்.

திருப்பெருந்துறைக் காட்சியைப் பல இடங்களில் கூறி அருளினாரேனும் 'புவனியில் சேவடி தீண்டினன் காண்க; சிவன் என யானும் தேறினன் காண்க' (திருவாச 3-61, 62) என்று வரும் பகுதி ஒரு விளக்கத்தைக் தருகிறது.

நம்மைப் பொறுத்தவரை எதிரே அமர்ந்திருக்கும் ஒருவரைப் பார்த்துக்கொண்டே வருவோமானால் முதலில் தெரிவது அவருடைய வடிவம். நெருங்கிச் சென்று பார்க்கும்போதுதான் அவருடைய கால்கள் தெரியும். ஆனால், அடிகளாரைப் பொறுத்தவரை நிலைமை தலைகீழாக உள்ளது. எதிரே உள்ளவரை, சிவன் என அவர் தேறுவதற்கு முன்னர் அவருக்கு காட்சி தந்தது புவனியைத் தீண்டிய குருவின் சேவடியாகும். அந்த முதற்காட்சியே இறுதிவரை அடிகளார் மனத்தில் நிலைத்துவிட்டதாதலால் தம்முடைய மாற்றத்திற்குக் குருநாதரைவிட அவர் திருவடிகளே காரணம் என்று