பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருச்சதகம் - 37


செயலுக்குப் புகுதலாகிய செயல் துணையாக நிற்பதையே இந்த வினையெச்சம் உணர்த்துகிறது. புகுந்து என்றுமட்டும் கூறினால் அதுவரையில் அந்த இடத்தில் இல்லாத ஒருவர் புறத்தே நின்று இப்பொழுது உள்ளே புகுந்தார் என்ற பொருளையே அறிவிக்கும். இறைவன் ஒருவனைத் தவிர வேறு நிலையியற்பொருள், இயங்கியற்பொருள் அனைத்திற்கும் இது பொதுவாகும். காரணம், பொருள் புறத்தே நிற்கும்போது அகத்தே இல்லை; அந்தப் பொருள் அகத்தே புகுந்த பிறகு புறத்தே இருக்க வாய்ப்பில்லை. எனவே, புகுந்தான் என்று கூறினால் இதுவரையில் அங்கில்லாமல் இருந்த ஒருவன் இப்பொழுது புதிதாகப் புகுந்தான் என்ற பொருளையே தரும்.

ஆனால், புகுந்து ஆண்டான் என்று மணிவாசகர் கூறும்போது இறைவனை அல்லவா குறிப்பிடுகின்றார்? எங்கும் எல்லாவற்றிலும் ஊடுருவி நிற்கின்ற ஒரு பொருளல்லவா இறைவன்! அப்படியானால் மணிவாசகரின் உள்ளத்தில் புகுந்து ஆண்டான் என்றால் அதற்கு முன்னர் அந்த உள்ளத்தில் அவன் இல்லையா? உள்ளத்திலும் அவன் முன்னரே இருக்கிறான் என்றால், புகுந்தான் என்ற சொல் பொருளின்றி வற்றும். பாடுபவர் மணிவாசகர் ஆயிற்றே! அப்படிப் பொருளின்றி வற்றும் ஒரு சொல்லைப் பல இடங்களில் அவர் பயன்படுத்துவாரா? எனவே, இதற்கொரு உட்பொருள் இருத்தல் வேண்டும். இறைவன் உள்ளே இருப்பினும் அவன் இருக்கின்றான் என்ற நினைவு அவர்பால் முன்னரில்லை. திருவடி தீட்சை பெற்ற பிறகு கிடைத்த புதிய அனுபவத்திற்குக் காரணம் புறத்தே குருவடிவில் இருக்கின்ற இறைவன் இப்பொழுது தம்முள் புகுந்ததாக அவர் உணர்கின்றதே ஆகும். புகுந்து என்ற சொல்லைக் கேட்டவுடன் கை, கால்களோடு கூடிய நாம், காலின் உதவி கொண்டு, ஒரிடத்தில் புகுவதை மனத்தில் வைத்துக்கொண்டு, அடிகளார் கூறும் புகுந்து