பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருச்சதகம் - 47


யாகிய மயக்கத்தை அளிக்கும் அமுதம். இரண்டு மிலித் தனியேனேற்கு-இரண்டுங்கெட்டானாகிய எனக்கு (துன்ப இன்பங்களை அறியும் ஆற்றலில்லாத எனக்கு).

திருப்பெருந்துறை நிகழ்ச்சியில் அடிகளார் பெற்ற வளர்ச்சியும் மாற்றங்களும் இப்பாடலில் பேசப் பெறுகின்றன. சிந்தனை” என்று தொடங்கி ஆர வந்து’ என்பதுவரை ஒரு நிலை ‘உள்ளே புகுந்த விச்சை மால் அமுதப் பெருங்கடலே’ என்பதுவரை இரண்டாவது நிலை. ‘மலையே உன்னைத் தந்தனை” என்பது மூன்றாவது நிலை.

“தனியனாகி நின்ற எனக்கு, என் வசத்தில் நில்லாமல் தொழிற்படும் ஐம்பொறிகளையும் அவற்றின் செயலுக்குக் காரணமான உள்ளத்தையும் உன் பணியில் அவை தொடர்ந்து ஈடுபடக் குருவடிவாக வந்தனை” என்பது முதல் நிலையின் விளக்கம்.

குருவின் காட்சி, தம் பொறி, புலன்களை அடக்கி ஆண்டதைக் கண்டு வியப்புற்ற அடிகளாருக்கு அடுத்து மிகப் பெரிய அனுபவம் வாய்க்கின்றது. இந்தக் குருவின் திருவருள் உள்ளே புகுந்தது. அவ்வாறு சொல்லிவிட்டால் அந்தத் திருவருள் ஏதோ ஒரு சிறிய பொருளென்றும், அது அடிகளாரின் உள்ளத்தில் புகுந்து ஒரு மூலையில் தங்கிவிட்டது என்றும் பொருள் கொண்டுவிடக் கூடாது என்று கருதிய அடிகளார் உள்ளே புகுந்த திருவருள் கடல்போன்று பெரியது என்றும், அது அமுதக் கடல் என்றும் பல்வேறு விச்சைகளை(வித்தைகளை) செய்யக்கூடிய ஆற்றல் பெற்றது என்றும் கூறினாராயிற்று. இது இரண்டாம் நிலையின் விளக்கம்.

கடல் என்று கூறினால் அதற்குள்ள சில இயல்புகளும் மனத்தில் தோன்றத்தான் செய்யும். ஓயாது ஒழியாது சலிப்பதும், ஏறி இறங்குவதும் கடலின் இயற்கை ஆதலால் புகுந்த இத் திருவருளும் இயல்புகளைப் பெற்றிருக்குமோ