பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

48 * திருவாசகம் - சில சிந்தனைகள் - 2


என்ற அச்சத்தைப் போக்க, கடலின் மாறான இயல்புகளையுடைய மலையை அடுத்துக் கூறினார். சலித்தலோ, ஏறி இறங்கும் இயல்போ இல்லாதது மலை. புகுந்த திருவருள் விருந்தினர்போல வந்து, தங்கி, சென்றுவிடும் இயல்பை மறுப்பான் வேண்டி ‘உன்னைத் தந்தனை” என்றார்.

பின்னரும் தந்தது உன் தன்னை, கொண்டது என் தன்னை (திருவாச. 397) என்று பாடுவதால் தன்னை முழுவதுமாகத் தந்தான் என்ற கருத்தைப் பெற வைக்கிறார்.

செந்தாமரைக் காடு’ என்று கூறியதால் வடிவு, உருவு ஆகியவற்றைக் கடந்து எங்கும் வியாபித்திருக்கும் இறை இயல்பைக் கூறினாராயிற்று வேனி என்ற சொல் இங்கே காணப்பெற்றாலும் சர்வ வியாபியாய் நிறைந்துள்ள இறைவனின் வடிவு என்ற பொருளையே தரும்.

31. தனியனேன் பெரும் பிறவிப் பெளவத்து எவ்வம்

தடம் திரையால் எற்றுண்டு பற்று ஒன்று இன்றிக்

கனியின் நேர் துவர் வாயார் என்னும் காலால்

கலக்குண்டு காம வான் சுறவின் வாய்ப்பட்டு

இனி என்னே உய்யும் ஆறு என்று என்று எண்ணி

அஞ்சு எழுத்தின் புணை பிடித்துக் கிடக்கின்றேனை

முனைவனே முதல் அந்தம் இல்லா மல்லல்

கரை காட்டி ஆட்கொண்டாய் மூர்க்கனேற்கே 27

கனி-கொவ்வைக் கனி. துவர்-சிவப்பு. கால்- காற்று; வான்சுறவு-சுறா மீன். புணை- தெப்பம். மல்லல்-வளப்பம்.

பெளவம்-கடல், எவ்வத் தடந்திரை - பிறவி என்னும் துன்பம் தருகின்ற தீராநோயான அலைகள், இப்பாடல் ஐந்தெழுத்தின் பெருமை கூறுகிறது.