பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

vi

அப்படியே கூறியுள்ளேன். இவ்வாறு சொல்வதற்குத் தொல்காப்பியத்தில் வரும் 'இறைச்சி' என்ற சொல் வலிவு தந்தது.

அனுபவத்திற்கு வடிவு கொடுக்கும் திருவாசகப் பாடல்கள் ஒரு கோவையாக, ஒரு வரன்முறைக்கு உட்பட்டு வருமென்று சொல்வதற்கில்லை. கோவையும், வரன் முறையும் வேண்டுமானால், அங்கே அறிவு தொழிற்பட வேண்டும். அறிவு தொழிற்படத் தொடங்கினால், உணர்வு குறையத் தொடங்கிவிடும்.

இக்கருத்துக்களை மனத்தில் கொண்டு ஒரு அடியையோ, சில அடிகளையோ அவ்வப்பொழுது படிக்கச் சொல்லிக் கேட்கும்போது என்ன சிந்தனைகள் மனத்தில் தோன்றினவோ அவையே இங்கு இடம் பெற்றுள்ளன. இச்சிந்தனைகள் என்னுடைய அறிவின் துணைகொண்டோ, அறுபது வருட இலக்கியப் பயிற்சியின் விளைவாகவோ தோன்றியவை அல்ல.

யாழ்ப்பாணம் திரு. மார்க்கண்டு அவர்கள் இரண்டு அடிகளையோ, நான்கு அடிகளையோ படித்துக் காட்டிய உடன் அந்த விநாடி என் மனத்தில் தோன்றிய சிந்தனைகளே இங்கு இடம்பெற்றுள்ளன. அதனாற்றான், திருவாசகம் - சில சிந்தனைகள் என்று இந் நூலுக்குப் பெயரிடப்பெற்றுள்ளது. மணிவாசகர் அருள் இருப்பின் திருவாசகம் முழுமைக்கும் இதே முறையில் சிந்தனை களைத் தொடர்ந்து எழுதலாம் என்று எண்ணியுள்ளேன்.

திருச்சதகம் முதல் அம்மானை முடிய உள்ள இந்த நூலையும் என் வாய்மொழியைக் கேட்டு கைப்பட எழுதியவர் யாழ்ப்பாணம் திரு. ச. மார்க்கண்டு ஆவார். இவருக்கு என் நல்வாழ்த்துக்கள் பெரிதும் உரியனவாகும்.

எழுதி முடித்த பின்னர் ஒவ்வொரு வரியாகப் பார்த்து தடைவிடைகளை எழுப்பி ஒரு முழுவடிவம் பெறுமாறு