பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருச்சதகம் * 75

}


என்று கூறியதால் புறத்தே அப்பொருள் காட்சியளித்தது என்பது தேற்றம். தன் உண்மையான 'வடிவை', அடிகளாரின் புறக்கண்களுக்கு விருந்தாகக் காட்டி உடன் மறைந்துவிட்டது. அதனாலேயே 'கண்டும் கண்டிலேன்’ என்கிறார் அடிகளார்.

47.

மேலை வானவரும் அறியாதது ஓர்
கோலமே எனை ஆட்கொண்ட கூத்தனே
ஞாலமே விசும்பே இவை வந்து போம்
காலமே உனை என்றுகொல் காண்பதே 43

கோலம்-திருவுருவம். வானவர்கள்-குருவாக வந்து மல நீக்கும் உபதேசம் பெற்றிலராதலின் வானவரறியாத கோல மென்றார்.

இப்பாடலின் பின் இரண்டு அடிகள் இன்றைய உலகம் ஏற்றுக்கொண்டுள்ள ஐன்ஸ்டினின் மிகச் சிறந்த கண்டுபிடிப்பாகிய ஒரு விஞ்ஞானக் கருத்தைக் கூறுவதாகும். இருபதாம் நூற்றாண்டு விஞ்ஞானியின் கருத்தை எட்டாம் நூற்றாண்டில் ஒரு மெய்ஞ்ஞானி உள்ளுணர்வால் கண்டு கூறியுள்ளார். இதன் விரிவை ‘திருவாசகம் சில சிந்தனைகள் - முதற் பகுதி' என்ற நூலின் பின்னுரை என்ற தலைப்பில் கண்டுகொள்ளலாம்.

48.

காணல் ஆம் பரமே கட்கு இறந்தது ஓர்
வாள் நிலாப் பொருளே இங்கு ஓர் பார்ப்பு எனப்
பாணனேன் படிற்று ஆக்கையை விட்டு உனைப்
பூணும் ஆறு அறியேன் புலன் போற்றியே 44

வாள் நிலா மிக்கஒளி, பார்ப்பு-குஞ்சு. படிறு-பொய். பாணனேன்-பாழானவனாகிய நான்.

'ஞானக் கண்ணால்மட்டும் காணக்கூடிய பரம்பொருளே! ஒளி பொருந்திய நிலவைப்போல குளிர்ந்த ஒளிவடிவானவனே! முட்டையை உடைத்துக்கொண்டு