பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

{{rh|||திருச்சதகம் * 77}}


பணி செய்யுமாறு ஏற்றுக்கொள்வானோ என்று பொருள்கூறலும் ஒன்று. (உளும் உள்ளும்).

51.

எந்தை யாய் எம்பிரான் மற்றும் யாவர்க்கும்
தந்தை தாய் தம்பிரான் தனக்கு அஃது இலான்
முந்தி என்னுள் புகுந்தனன் யாவரும்
சிந்தையாலும் அறிவு அரும் செல்வனே 47

தோற்றம், ஈறு அற்றவனாகிய பெருமான்-ஏனையோர் யாவரும் சிந்தையாலும் சிந்திப்பதற்கரிய பெருமான், தானே வந்து தம்முடைய உள்ளம் புகுந்து அருள்செய்தான் என்கிறார்.

பின்னரும் ‘நானேயோ தவஞ் செய்தேன்’ (திருவாச: 555) என்று தொடங்கும் பாடலில் தானே வந்து எனது உள்ளம் புகுந்தருளி அடியேற்கு அருள் செய்தான்’ என்று கூறுகிறார்.

52.

செல்வம் நல்குரவு இன்றி விண்ணோர் புழுப்
புல்வரம்பு இன்றி யார்க்கும் அரும் பொருள்
எல்லை இல் கழல் கண்டும் பிரிந்தனன்
கல் வகை மனத்தேன் பட்ட கட்டமே 48

நல்குரவு-வறுமை. எல்லையில்கழல்-சொல்லெல்லையும் கருத்தெல்லையும் கடந்துநின்ற திருவடி. கட்டம்-துன்பம்.

அஃறிணைப் பொருள்களாகிய புல் முதல், உயர்திணை என்று கூறப்பெறும் தேவர்கள், செல்வர், வறியர் எனப் பிரிக்கப்பெறும் மக்கள் ஆகிய யார்க்கும் அறியொனாதவன்.

மேலே கூறப்பெற்ற அஃறிணை, உயர்திணை என்ற இரு வகுப்பிலும் காணப்பெறும் அனைத்திலும் அந்தர்யாமியாய் அவன் இருப்பினும் அவர்கள் யார்க்கும் இவன் அறியொணாதவன் என்றார். 'அத்தகைய பெருமான்