பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

78 * திருவாசகம் - சில சிந்தனைகள் - 2


எல்லையில்லாத தன் திருவடிகளை எனக்குக் காட்டினான். அவற்றைக் கண்டபிறகும் அதனோடு இணைந்துவிடாது பிரிந்தனன். அதன் காரணம் என் மனம் அன்பால் உருகாமல், பல்வகைக் கற்களில் வலிதாய கருங்கல்போல், இருந்தமையினால் ஆகும். அதனால் யான்பட்ட துன்பம் சொல்லும் தரத்ததன்று'.

53.

கட்டு அறுத்து எனை ஆண்டு கண் ஆர நீறு
இட்ட அன்பரொடு யாவரும் காணவே
பட்டிமண்டபம் ஏற்றினை
ஏற்றினை எட்டினோடு இரண்டும் அறியேனையே 49

பட்டிமண்டபம்-வாத சபை..

திருப்பெருந்துறையில் திருவருள் பெற்று அமர்ந்திருந்த அடியார்களிடையே, தம்மையும் ஒருவராக்கி அமர்த்தியமையை நினைக்கின்றார் அடிகளார். சிவஞானம்(பர ஞானம்) கைவரப்பெற்ற அவர்கள் எங்கே? உலக ஞானம்(அபர ஞானம்) கூடப் பெறாத தாம் எங்கே?

இந்த நினைவு வந்தவுடன் தம்முடைய அறியாமைக்கு ஓர் எல்லை வகுக்கும் முறையில் எட்டும், இரண்டும் எவ்வளவு என்று அறியாத தாம் என்கிறார்.

எட்டினோடு இரண்டும் என்ற தொடருக்கு அகர(8) உகரம்(2) என்றும், இவை இரண்டும் கூட்டிய பத்துக்கு யகரம் என்றும் பொருள் கூறுவாரும் உளர். இவ்வாறு எல்லாம் பொருள் கொள்ள இடந்தந்து நிற்பதுதான் அடிகளாரின் பாடற்சிறப்பு (தமிழ் எண் வடிவில் அகரம் எட்டையும் உகரம் இரண்டையும் குறிக்கும். பத்து என்பதை யகரம் போன்ற எழுத்துக் குறிக்கும்).

54.

அறிவனே அமுதே அடி நாயினேன்
அறிவன் ஆகக் கொண்டோ எனை ஆண்டது