பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருச்சதகம் * 89


செய்வதற்கு அல்ல. இதைத் தவறாமல் மனத்தில் பதித்துக் கொள்ள வேண்டும்.

62.

தேனைப் பாலைக் கன்னலின்
      தெளியை ஒளியைத் தெளிந்தார்தம்
ஊனை உருககும உடையானை
      உம்பரானை வம்பனேன்
நான் நின் அடியேன் நீ என்னை
      ஆண்டாய் என்றால் அடியேற்குத்
தானும் சிரித்தே அருளலாம்
       தன்மை ஆம் என் தன்மையே 58

கன்னல்-கரும்பு. தெளிந்தார்-அநுபவஞானிகள். ஊன்ஊனாகிய உடல்.

‘ஐயனே! புதிதாக வந்துசேர்ந்தவன் ஆகிய நான் உனக்கு அடியனாகிவிட்டேன். நீயே என்னை ஆட்கொண்டாய் என்று நான் கூறினால், அது உனக்குச் சிரிப்பை விளைவிக்கும். அந்தச் சிரிப்பின் காரணமே, நான் கூறுவது பொருந்தாக் கூற்று என்பதாலாகும். என்றாலும், மறுபடியும் என்னை மன்னித்து ஆட்கொள்வாய்' என்றவாறு.

63.

தன்மை பிறரால் அறியாத
      தலைவா பொல்லா நாய் ஆன
புன்மையேனை ஆண்டு ஐயா
      புறமே போக விடுவாயோ
என்னை நோக்குவார் யாரே
      என் நான் செய்கேன் எம்பெருமான்
பொன்னே திகழும் திருமேனி
      எந்தாய் எங்குப் புகுவேனே 59

பிறரால் அறியாத தலைவா-பலதிறப்பட்ட ஆன்மாக்களின் அறிவால் அறியப் பெறாத தன்மையையுடைய தலைவனே.