பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10 திருவாசக ஒளிநெறி

தமிழ்க் கடவுளாம் முருகவேள் தமிழின்பம் உலகிற் பரவ வேண்டி ஒவ்வொருவரை இவ்வுலகுக்கு அவ்வப்போது அனுப்பு கின்றனர். சங்கநூல் முதலாம் (ஒலைச் சுவடியிலிருந்த) தமிழ் நூல்கள் அழிவுபடாதபடி அவைகளே உய்ப்பிக்க வேண்டி டாக்டர் மகாமகோபாத்யாய உ. வே. சாமிநாதையர் அவர்களை இவ் வுலகிற்கு அனுப்பினர். ஒலையிலிருந்த அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்ப் பாடல்கள் உலகினர் பெற்று ஓதி உய்ய வேண்டி எந்தையார் வ. த. சுப்பிரமணிய பிள்ளை யவர்களை இவ்வுலகிற்கு அனுப்பினர்.

கடவுளே அனுப்பிய காரணத்தால் அவர்களே 'அவதார புருடர்' என்ப. இப்போது, தமிழ் நூல்களின் பெருமை தமிழ் காட்டிலேயன்றி உலகெங்கும் பரவவேண்டுமென்னும் ஆசையை ஊட்டுவித்து நல்ல முறையில் அவற்றை அச்சேற்றியும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தும் பரவச் செய்யவேண்டி இறைவனால் அனுப்பபட்டவர் மேற்குறித்த சுப்பையா பிள்ளை யாவர். இங்ஙனம் மேற்சொன்ன மூவரும் முருகப்பிரானால் இவ்வுலகிற்கு அனுப்பப்பட்டார் என்பதற்குச் சான்று அம்மூவர் பெயரும் அக்கடவுளின் பெயராய் அமைந்துள்ளதே என அறிந்து இறும்பூது எய்துகின்றேன்.

தமிழே என்றன் மூச்சாகும், தமிழே என்றன் பேச்சாகும்

தமிழன்பர்களே எனக்குரிய தமராம் என்றே மகிழ்வேன், நல்

தமிழ் நாலெல்லாம்

கமழச் செய்யும் பணியதுவே கடமையாகப் பூண்டுள்ளேன்

என்ற விரதங் தனக்கொண்ட ஏங்தல் சுப்பையா நம்பி

நன்றே இந்த நானிலத்தில் நோயே யின்றிப் பல்லாண்டு வென்றியுடனே வாழ்கஎன வேண்டித் தணிகை முதலான குன்றுதோறும் விளையாடும் குமரன் திருத்தாள் பணிகுவனால்

மணிவாசகப்பெருமான் திருவருளால் கழகம் வாழ்க!

கழக உறுப்பினர்கள் யாவரும் வாழ்க!

வாழ்க செந்தமிழ்! வாழ்க வையகம் !

18, வெங்கட்ராமன் தெரு

"சிவாலயா", சென்னை-28.

15-8-1967

வ. சு. செங்கல்வராய பிள்ளை,

அடுத்த பக்கம்