பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

1 - (1). ஒப்புமைப் பகுதி

1.2 "இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க "

"நெஞ்சம் உமக்கே இடமாக வைத்தேன் நினே யாது -ஒருபோதும் இருந்தறியேன்." அப்பர் 4-1-2

1.31 "எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன்"

"விந்ததி னூறி வந்தது காயம் வெந்தது கோடி" - திருப்புகழ் 98*

எழுகடல் மணலை அளவிடின் அதிகம் எனதிடர் பிறவி அவதாரம். - திருப்புகழ் 634*

"பெற்றலுத்தாள் தாயார் பிறந்தலுத்தேன் யானும்"- பட்டினத்தடிகள் பூரணமாலை 26

1.35 "ஐயா எனவோங்கி ஆழ்ந்தகன்ற நுண்ணியனே"

"ஆழியனுய் அகன்றே உயர்ந்தானை" சுந்தரர் 7-67-3

1.36 "வெய்யாய் தணியாய்"

"தண்ணியல் வெம்மையினான்' சுந்தரர் 7-98-1

1.44 "நாற்றத்தின் நேரியாய்"

"நறுமலர் எழுதரு நாற்றம் போல் பற்றலாவதோர் நிலையிலாப் பரம்பொருள் 26-9

1.60 "நாயிற் கடையாய்க் கிடந்த அடியேன்"

(13-3 பார்க்க)

1.64 "பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே"

(8 - 20, 10 -5 பார்க்க)

1.70 "இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே"

இன்பன் காண் துன்பங்களில்லாதான் காண் - அப்பர் 6-48-3

1. 76 "நோக்கரிய நோக்கே"

'மிக நோக்கரியராய' சம்பந்தர் 3.70 3

1.77 "போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே"

(20 - 5 பார்க்க)

1.86-87 "மெய்யானுர் மீட்டிங்கு வந்து வினைப்பிறவி சராமே"

"கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர் மற்றீண்டு வாரா நெறி" திருக்குறள் 356

*திருப்புகழ் எண்கள் வ. த. சு. பிள்ளை அவர்கள் பதிப்பின்படி அடுத்த பக்கம்