பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒப்புமைப் பகுதி 9

5 - 6 "அன்பருள்ளங் கரந்து நில்லாக் கள்வனே"

"அடியார்க்குக் கரக்ககில்லாதருள் செய் பெருமான்' -சம்பந்தர் 2-59-8

5 – 11 "ஆடகச் சீர் மணிக்குன்றே"

'மாசற்ற மணிக்குன்றே' 5-24

'கனகக் குன்றே' 4-98

"மாணிக்க மலேயை' திருவிசைப்பா 5-2

5.12 “இறப்பதனுக் கென் கடவேன்"

'நெக்குற அறிவு கலங்கு சாக்காடு நினைதொறும் உள்ளம் பதைக்கின்றேன்'-சோணசைலமாலை 68

'அஞ்சினேன் நமனரவர் தம்மை' -சுந்தரர் 7-60-2

'நமன்தமர் நரகத்திடல் அஞ்சி இடுக்கண் உற்றனன்'-சுந்தரர் 7.60.7

5.14 "பூமாலை புனைந்தேத்தேன் புகழ்ந்துரையேன் புத்தேளிர் கோமான்நின்திருக்கோயில் துகேன் மெழுகேன்"

எம்பிரானுடைய கோயில் புக்குப், புலர்வதன்முன்

அலகிட்டு மெழுக்கும் இட்டுப், பூமாலே

புனேங்தேத்திப் புகழ்ந்து பாடி' -அப்பர் 6-81-8

5.15 "யானெனதென் வரவரைக் கூததாட்டுவானுகி நின்ருயை யென்சொல்லி வாழ்த்துவனே"

'என் ஆணாய் என் ஆணாய் என்னி னல்லால்

ஏழையேன் என் சொல்லி ஏத்து கேனே.” - அப்பர் 6.95-7

'என்னென கின்னேயாம் ஏத்துகின்றதே" - கந்தபுராணம் 1-11-86

5.21 "பதைத்துருகுமவர் நிற்க என்னை ஆண்டாய்"

'செம்மனக் கிழவோ ரன்புதா வென்றுன் சேவடி

பார்த்திருங் தலச, எம்மனங் குடிகொண்டு

இருப்பதற் கியானுர் என்னுடை அடிமை தான் யாதே' திருவிசைப்பா 1:4-6

(5-54 பார்க்க)

5.26 "உன்னைத் தந்தனை"

“தந்தது உன்றன்னே' 22-10

"தன்னேயே தந்தானென்று உந்திபற"

மெய்கண்ட திருவுந்தியார் 6