பக்கம்:திருவாசக ஒளிநெறி.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பதிப்புரை சைவத் திருமுறைகள் பன்னிரண்டனுள் முதன் மூன்று திருமுறைகள் திருஞானசம்பந்த நாயனாரானும், அடுத்த மூன்று திருமுறைகள் திருநாவுக்கரசு நாயனாரானும், ஏழாந் திருமுறை சுந்திரமூர்த்தி நாயனாரானும்க அருளிச்செய்யப் பெற்றன.

எட்டாம் திருமுறையாகிய திருவாசகம், திருக்கோவையார் ஆகிய அன்புநிறை செழுந்தமிழ் நூல்கள் இரண்டையும் அருளிச் செய்தவர் அழுதடியடைந்த அன்பராம் மாணிக்கவாசகப் பெருமானுராவர்.

தேவார ஒளிநெறி என்ற தலைப்பில் திருஞானசம்பந்தர் தேவாரப் பதிகங்கட்கு 1600 பக்கங்களில் 3 பகுதிகளும், திருநாவுக்கரசர் தேவாரப் பதிகங்கட்கு 1086 பக்கங்களில் 3 பகுதிகளும், சுந்தரர் தேவாரப்பதிகங்கட்கு 740 பக்கங்களில் ஒன்றும் ஆக 6 பகுதிகள் திருத்தணிகை முருகன் திருவருள் கைவரப்பெற்ற சிவத்திரு. வ. சு. செங்கல்வராய பிள்ளை, எம். ஏ.,அவர்களால் எழுதப்பெற்றுக் கழகவழி வெளிவந்துள்ளன.

மணிவாசகப் பெருமானாருளிய திருவாசகத் தீஞ்சுவைப் பதிகங்கட்குத் திருவாசக ஒளிநெறி' என்ற தலைப்பில் சிவத்திரு ஐயா அவர்களாலேயே ஒளிநெறி எழுதப்பெற்று வெளியிடப் பெறுகின்றது.

திருவாசகத்தை ஒதுபவர்கட்கும் ஆய்பவர்கட்கும் மிக்க பயன்படும் வகையில், இதன்கண் ஒப்புமைப் பகுதியை முதற்கண் அமைத்திருப்பதும், சிவபிராற் பகுதியை 113 தலைப்புக்களிலும், மணிவாசகப் பகுதியை 33 தலைப்புக்களிலும், திருவாசக ஆய்வினை அடுத்த பக்கம்